""என்னங்க உங்களுக்கு இப்போவெல்லாம் ஞாபக மறதி அதிகமாகுதே..?''
""எப்படி சொல்றே..?''
""என் சேலையை துவைக்கச் சொன்னா, வேலைக்காரி சேலையைத் துவைக்கிறீங்களே..''
-இந்து குமரப்பன், விழுப்புரம்.
------------------------------------------------------------
""ஹலோ மை டியர் வைஃப்...''
""என்ன.. குடிச்சிருக்கியா?''
-அ.ரியாஸ், சேலம்.
------------------------------------------------------------
""என்னங்க.. நான் வாங்கிய பொம்மை உங்க அம்மாவுக்கு பிடிக்கலையாம்...''
""ஏன்..''
""அது அவங்களைப் பார்த்து கைகொட்டி சிரிக்குதாம்...''
-பர்வதவர்த்தினி, பம்மல்.
------------------------------------------------------------
""எதுக்காக உன் புருஷன் தூங்கும்போது காலில் கேன்வாஸ் ஷு போட்டுக்காரு..''
""அவருக்கு தூக்கத்தில் வாக்கிங் போற வியாதி.. அதான்.''
-எஸ்.மாரிமுத்து, சென்னை.
------------------------------------------------------------
""இப்பவெல்லாம் நீங்க உங்க மனைவிக்கு பயப்படறதில்லையாமே...?''
""ஆமாம். எங்களுக்கு விவகாரத்து நடந்து ரெண்டு மாசமாச்சு..''
-பர்வீன் யூனுஸ், சென்னை.
------------------------------------------------------------
""என்னங்க.. தள்ளுபடின்னு நோட்டீஸ் ஒட்டியிருக்காங்க?''
""எங்கே.. தள்ளு.. படிச்சுப் பார்க்கறேன்...''
------------------------------------------------------------
"காரணமே இல்லாம ஏன்டி புதுசா குடிவந்திருக்கிற பெண்ணோட சண்டை போட்டே..''
"அதில்லைங்க.. அவங்க அசப்பில் சீரியலில் வர்ற வில்லி மாதிரி இருக்காங்க?''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
------------------------------------------------------------
""ஊட்டி- கொடைக்கானல் போகணுமுன்னு என் மனைவி பிடிவாதம்..''
""அடிக்கிற வெயிலுக்கு கூட்டிப் போறதுதானே..''
""நீங்க வேற.. அங்கேயும் இதே வெயில்தான் சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன்..''
------------------------------------------------------------
""என்ன இது.. வீட்டு வாசலில் அரசியல் பேசக் கூடாதுன்னு எழுதியிருக்கீங்க..?''
""சீரியல் பார்கிற என் மனைவிக்கு தொந்தரவா இருக்காம்...''
------------------------------------------------------------
""என் மனைவி சீரியலே பார்க்க மாட்டா..''
"" நீங்க கொடுத்து வச்சவங்க..?''
""அட.. அவளுக்கு சீரியல் கதைங்களைச் சொல்லிக்கிட்டே
இருக்கணும்...''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"சார், உங்களுக்கு தெரிஞ்ச Advice எதாச்சும் சொல்லுங்க!" முதல்வருடன் Talk With Deva சுட்டிகள்!
மனைவிக்கு சகோதரி கணவருடன் தொடா்பு - கண்டித்த கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி!

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
சிரி... சிரி...
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...