
தகவல் தொடர்பின் தொடக்க நிலையில், அனைவரையும் இணைத்தது தபால் துறைதான். செல்லிடப்பேசி, இணையம், தனியார் கொரியர்கள்... என்று தொழில்நுட்பம் பிரமாண்ட வளர்ச்சியடைந்த நிலையில், தற்போது கடிதம் எழுதுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இருந்தாலும், கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அனைத்து நாடுகளிலும் தபால் துறை செயல்படுகின்றன. அதன் அடையாளமாக நகர்கள், ஊர்களின் தெருக்களில் அமைந்திருப்பது தான் சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள்.
ஆனால், கடலுக்கு அடியில் நிறுவப்பட்டிருக்கும் அஞ்சல் பெட்டி ஒன்று ஆச்சரியத்தைத் தருகிறது. தபாலைப் போட, பெட்டியில் போடப்பட்ட தபால்களைச் சேகரிக்க கடலுக்குள் நீந்திச் செல்லவேண்டும்.
ஜப்பான் நாட்டில் "சுசாமி பே" எனும் இடத்தில் அஞ்சல் பெட்டி கடலுக்கு அடியில், சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டியில் தினமும் 1,500 தபால் அட்டைகள் வரையில் போடப்படுகிறது.உலகில் தனித்துவமான இந்தக் கடல் அஞ்சல் பெட்டி 2002-இல் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. ஜப்பான் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த கடல் அஞ்சல் பெட்டியைப் பார்க்கவும், அதில் தபால் அட்டைகளை போடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
-பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.