

தேவையான பொருள்கள்:
பாசிப் பருப்பு மாவு, பச்சரிசி- தலா 300 கிராம்
உருண்டை வெல்லம்- 400 கிராம்
சர்க்கரை, எள்- 1 மேசைக்கரண்டி
தேங்காய்-1
உளுத்தம் பருப்பு- 50 கிராம்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியையும், உளுத்தம் பருப்புவையும் சேர்த்து நனைய வைக்க வேண்டும். தேங்காயைத் துருவி வெல்லத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். மீதி இரண்டு பாகம் வெல்லத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து இளக்கி இளம்பாகு தயார் செய்ய வேண்டும்.
பின்னர், பாசிப் பருப்பு மாவுடன் எள், ஏலப்பொடி, வதக்கிய தேங்காய், சர்க்கரை, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைய வேண்டும். பின்னர், சிறிய கோலிக் குண்டு அளவு உருண்டைகளை உருட்டி வைக்க வேண்டும். அரிசியையும் உளுந்தையும் சிறிது உப்பு சேர்த்து மாவாக அரைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளில் மூன்று உருண்டைகளைச் சேர்த்து மாவில் முக்கி போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும். உருண்டைகள் கலையாமல் திருப்பிப் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.