அவகேடா பழம்...

அவகேடா பழம்- இதை தமிழில் பேரிக்காய் என்று அழைப்பர். அமெரிக்காவின் மெக்சிகோ- கோஸ்டாரிகா பகுதிகளில் அதிகம் விளைகிறது.
அவகேடா பழம்
அவகேடா பழம்
Updated on
1 min read

அவகேடா பழம்- இதை தமிழில் பேரிக்காய் என்று அழைப்பர். அமெரிக்காவின் மெக்சிகோ- கோஸ்டாரிகா பகுதிகளில் அதிகம் விளைகிறது.

மொத்த உற்பத்தியில் 30 % மெக்சிகோ, ரீயூனியனில் இருந்து வருகிறது. மேல்தோல் பச்சை, பழுப்பு, ஊதா, கருப்பு உள்ளிட்ட பல வகைகளில் காணப்படும். அதிக கொழுப்பை உள்ளடக்கியது. இதில், வைட்டமின் பி, தாதுக்கள் அதிகம். 73 % நீர், 15 % கொழுப்பு, 9 % கார்போஹைட்ரேட் கொண்டது.

பழ சாலட், சான்விட்ச், பால், சாக்லெட்டில் இது இணைக்கப்படுகிறது. சில பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அல்லது ரொட்டியுடன் இணைத்து சாப்பிடுவர்.

ஒரு வாரத்தில் இரு தடவை சாப்பிட்டாலே இதய நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நரம்பு தொடர்புடைய நோய்களுக்கு அருமருந்தாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com