தேவையானவை:
மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தனியா, ஓமம் ஆகிய வறுத்து அரைத்தது - தலா ஒரு தேக்கரண்டி
புளி- சிறு எலுமிச்சை அளவு
பூண்டு - 15 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை:
புளியை நெருப்பில் சுட்டு (அ) தணலில் வாட்டி வெந்நீரில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொருள்களைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து, கொதித்து எண்ணெய் பிரிந்ததும் எடுத்து ஸ்டாக் செய்துகொள்ளலாம்.