உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

97 வயதில் 'விங் வாக்கிங்'

'விங் வாக்கிங்' எனப்படுவது பறக்கும்போது விமான இறக்கையின் மீது பயணம் செய்யும் சாகசமாகும்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

'விங் வாக்கிங்' எனப்படுவது பறக்கும்போது விமான இறக்கையின் மீது பயணம் செய்யும் சாகசமாகும். இங்கிலாந்தின் செல்டென்ஹாம் நகரைச் சேர்ந்த பெட்டி ப்ரோமேஜ் என்ற தொண்ணூற்று ஏழு வயதான பெண்மணி, ஆகஸ்ட் 4-இல் 'விங் வாக்கிங்' செய்து, 'உலகின் மிக வயதான பெண்மணி' என்ற புதிய கின்னஸ் சாதனை படைத்ததோடு, தனது முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார்.

அவர் தனது 87-ஆம் வயதில் முதன்முறையாக விமானத்தின் இறக்கையின் வெளிப்புறத்தில் நின்றபடி விமானத்துடன் பறந்தார். இதுவரை இப்படி ஆறு முறை பறந்துள்ளார். அதனால், ஆறு முறை 'விங் வாக்கிங்' செய்த வயதான பெண்மணி என்ற பெருமைக்கும் இவர் உரியவராவார்.

அவர் கூறியது:

'என்னால் வாகனம் ஓட்ட முடியாது. பார்வையும் அவ்வளவு தெளிவாக இல்லை. அதனால் சில சமயங்களில் விரக்தியாக உணர்வேன். என்னால் முடிந்த விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன். 'என்னால் முடியாது' என்ற வார்த்தை என் அகராதியிலேயே இல்லை.

ஆகஸ்ட் 2025-இல் பக்கவாதத்தால் நான் பாதிக்கப்பட்டபோது, எனக்குச் சிகிச்சையளித்த செல்டென்ஹாம் பொது மருத்துவமனைக்காக, நிதி திரட்டினேன். பக்கவாதமானது எனது பேச்சுத் திறனில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், உடலின் மற்ற பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

விமானம் புறப்படுதல், வானில் பறத்தல், தரையிறங்குதல் உட்பட குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் கொண்ட விமானப் பயணமாக இருக்க வேண்டும் என்பது கின்னஸ் விதிமுறை. ஆயிரம் அடி உயரத்தில், முகத்தில் காற்று படுவேகமாக மோத, விமானம் மேலும் கீழும் அலைபாய்ந்து சுழல, எனது ஆறாவது 'விங் வாக்' சாகசத்தை வெற்றிகரமாக முடித்தேன். உயிருடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை எனது ஆறாவது சாதனையை முறியடிக்க... மீண்டும் ஏழாவது முறை இன்னும் அதிக நேரம் வானில் பறப்பேன்.

விமானத்தில் வெளியே நின்று கொண்டு பறக்க எதற்காகப் பயப்பட வேண்டும். விமானம் பறக்கும்போது நான் கீழே விழாமல் இருக்க, விமானத்தின் மேல் இறக்கையில் என்னை நிற்க வைத்து பாதுகாப்புப் பட்டிகளைக் கொண்டு என்னைக் கட்டுவார்கள். விமானத்தின் மேல் இறக்கை தரையிலிருந்து சுமார் 15 அடி உயரத்தில் இருக்கும். விமானம் வானில் பறக்கும்போது தலை கீழாகவும் பறக்கும். அப்போது நான் தலைகீழாக தொங்கிக் கொண்டு விமானத்துடன் பறந்தேன். அந்த அரிய அனுபவம் சிலிர்ப்பைத் தந்தது' என்கிறார் பெட்டி.

Story image

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் வீரரான ஹாரி ஹீஸ்மேன் விமான இறக்கையின் மீது நின்று பயணித்தவர்களில் 'அதிக வயதுள்ள ஆண்'. விமானத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் பறந்து, 2026 மே மாதத்தில் சாதனை படைத்த ஹாரிக்கு 98 வயதாகிறது. பெட்டி 97 வயதாவதால் 'விமான இறக்கையின் மீது நின்று பயணித்த பெண்களில் 'அதிக வயதுள்ள பெண்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

-சுதந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.