

தேவையான பொருள்கள்:
பாசிப் பருப்பு - 1/4 கிண்ணம்
தண்ணீர் - 5 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
நெய் - 2 மேஜை கரண்டி
முந்திரிப் பருப்பு - 15
ஏலக்காய் - 5,
தேங்காய்ப்பால் - 1 கிண்ணம்
செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 5 கிண்ணம் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை போட்டு வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் களைந்து போட்டு, இரண்டும் நன்கு குழைந்தபின், வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, நெய்யை ஊற்றி, வறுத்த முந்திரியைப் போட்டு, ஏலக்காய்ப் பொடியைப் போட்டு, தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.