ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நலம் தரும் உணவுகள்

சீத்தாப் பழத்தை ஆங்கிலத்தில் 'சுகர் ஆப்பிள்' என்று அழைப்பர்.

Published On :5 ஜூலை 2026, 4:16 am IST

சீத்தாப் பழத்தை ஆங்கிலத்தில் 'சுகர் ஆப்பிள்' என்று அழைப்பர். இதில், வைட்டமின் சி, கால்சியம் சத்துகள் மிகுதியாக உள்ளன. இதுதவிர மா, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் அடங்கியுள்ளன. அமெரிக்க, மேற்கத்தியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த சீத்தாப்பழம், ஸ்பானிய வணிகர்களால் ஆசியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மருத்துவக் குணங்களைக் கொண்ட சீத்தாப்பழத்தைச் சாப்பிட்டால், உடல் வலிமையாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலும்பு, பற்கள் பலம் அடையும். ரத்த ஓட்டம் சீராகும். நினைவாற்றால் திறன் அதிகரிக்கும். இதில், குளுக்கோஸ் அதிகம் உள்ளதால், உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

உடலுக்குச் சக்தியை அளிக்கும் நிலப்பச்சை பாசி எனும் ஸ்பைரூலினாவில் நுண்ணூட்ட சத்துகள் அதிகம் உள்ளன. இயற்கை ஊட்டச்சத்து உணவான இது, சிறிய அளவிலான தண்ணீர் தொட்டியிலும் வளரும்.

புரதச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள், குளோரோபில் செல் புதுப்பித்தல், நோய்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற ஏராளமான சத்துகள் உள்ளன. ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்பு அளவைக் குறைக்கும். உடல் சோர்வையும் கற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.