தேவையான பொருள்கள்:
சிறிய கத்திரிக்காய் - 100 கிராம்
மிளகாய் -ஐந்து
பூண்டு, வெங்காயம் -தலா 2
எள் -இரண்டு மேஜைக் கரண்டி
புளி- சிறு உருண்டை
தனியா, தேங்காய்த் துருவல்-
தலா ஒரு கரண்டி
மஞ்சள் பொடி, கடுகு - தலா ஒரு மேஜைக்கரண்டி
வெல்லக்கட்டி -சிறியது ஒன்று
பச்சை மிளகாய்- 5
கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் -சிறிதளவு
செய்முறை:
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு மஞ்சள் பொடியை கத்திரிக்காயின் மீதும் பூசிவிட்டு, நல்லெண்ணெயில் தோல் பழுப்பு நிறமாகும் வரை வதக்கி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து தனியா, மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்கி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எள்ளை மட்டும் தனியாக வறுத்து பொடியாகச் செய்து கொள்ள வேண்டும்.
புளியை தேவையான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, பிறகு புளித்தண்ணீரை மட்டும் எடுத்து, ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து மசாலாக் கூழைக் கலந்துவிடவேண்டும். ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு கத்திரிக்காய்களையும் எள் பொடியையும் போட்டு மூடி விடவேண்டும். எல்லாம் சேர்ந்து கெட்டியாக மாறியவுடன், வெல்லத் துண்டை போடவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடுகு ஆகியவற்றை வறுத்து, கத்திரிக்காய் கறியுடன் சேர்த்து விடவேண்டும். பிறகு கிளறி விட்டு கீழே இறக்கி விட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





