19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

'மேக் அப்'பில் கவனம்!

'மேக் அப்' செய்யாமல் வெளியே கிளம்பும் பெண்கள் அரிது. 'காஸ்மெடிக்ஸ்' எனப்படும் ஒப்பனைப் பொருள்கள் உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

Anna Bizon

Updated On :

'மேக் அப்' செய்யாமல் வெளியே கிளம்பும் பெண்கள் அரிது. 'காஸ்மெடிக்ஸ்' எனப்படும் ஒப்பனைப் பொருள்கள் உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

2025-ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி, உலகெங்கும் இந்தப் பொருள்களின் விற்பனை 80 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டிவிட்டது.

இந்த ரசாயனப் பொருள்களால் பெண்களுக்குத் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. தோலின் வழியே உள்ளே புகும் ரசாயனம் ரத்தத்துடன் கலப்பதால், அவை மரபணு ரீதியான வியாதிகள், புற்றுநோய், மூளைக் கோளாறு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகின்றன.

மேக் அப் சாதனங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

'டால்க்' எனப்படும் மாக்கல் அல்லது சீமைக் சுண்ணாம்புக் கல் ஆபத்தில்லாதவை என்றாலும், அத்துடன் புற்றுநோயை உருவாக்கும் அஸ்பெஸ்டாஸ் உள்ளது.

ஒருசில ஒப்பனைப் பொருள்களில் சில பாக்டீரியாக்களைத் தவிர்ப்பதற்காக 'ட்ரைக்லோஸன்' கலக்கப்படுகிறது. டூத் பேஸ்ட், சில வகை சோப்புகள், பாடி வாஷ் தயாரிப்புகள் ஆகியவற்றில் இவை உள்ளன. இவை அதிகமாக இருந்தால் தைராய்டு ஹார்மோனை பாதிப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கிறது.

கண் ஒப்பனைப் பொருள்களில் கலக்கப்படும் காரீயம் கண்களைப் பாதிக்கும். பல ஒப்பனைப் பொருள்களில் சேர்க்கப்படும் பாதரசம், திம்ரோஸல் ஆகியன நரம்பு மண்டலத்தையும், சிறுநீரகத்தையும் சேதப்படுத்துகிறது.

ஹேர் ஸ்ப்ரே, நெய்ல் பாலிஷ்களில் கலக்கப்படும் ப்தலேட்ஸ் எனும் ரசாயனமானது மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆபத்தான வியாதிகளை உருவாக்கும்.

பாராபென் என்ற பூச்சுகளின் ஆயுள்காலத்தை நீடிக்கவைக்கும் 'ப்ரிஸர்வேடிவ்', மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்டதாகும்.

நெய்ல் பாலிஷில் கலக்கப்படும் டோலுன் மூளை, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.

சில லோஷன், ஷாம்புகளில் கலக்கப்படும் 'ஃபார்மல்டீஹைட்' எனும் பொருள் எரிச்சலையும் ஒவ்வாமையையும் உருவாக்குகிறது.

கண் இமைகளில் பூச்சாக உபயோகப்படுத்தப்படுகிறது கார்பன் ப்ளாக். இது லிப்ஸ்டிக்கிலும் உள்ளது. வண்ணத்தை அளிப்பதற்காகச் சேர்க்கப்படும் இதுவும் அபாயம் விளைவிப்பதாகும்.

பாதுகாப்பு நடைமுறைகள்:

ஒப்பனைப் பொருள்களை அலங்கார அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டாம்.

ஒப்பனைப் பொருள்களில் தேவையற்ற ரசாயனங்கள் நிறைந்திருப்பதைக் கண்டால் அவற்றை வாங்கக்கூடாது.

சுத்தமானவை, இயற்கையானவை என்று ஒப்பனைப் பொருள்களில் விளம்பர வாசகங்கள் இருந்தாலும், அதை நம்பகமானது என்று நம்பிவிட வேண்டாம். அந்தத் தயாரிப்பில் எந்தெந்த ரசாயனங்கள் இருக்கின்றன என்று கவனிக்க வேண்டும்.

கண்களுக்கான ஒப்பனைப் பொருள்கள், தோல் பூச்சு, உதடுப் பூச்சு உள்ளிட்ட எதை வாங்கினாலும் மறைந்திருக்கும் அபாயம் அதில் இருக்கிறதா என்று பலமுறை சரிபார்க்க வேண்டும்.

அழகை மெருகூட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்தான். இருந்தாலும், அதைவிட உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.