கோதுமை இனிப்பு அப்பம்
வெல்லத்தைப் பொடி செய்து, இளம்சூடான நீரில் கரைத்து வடிகட்ட வேண்டும்.
கோதுமை இனிப்பு அப்பம்
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு -200 கிராம்
வெல்லம்- 250 கிராம்
தேங்காய்த் துருவல் - ஒரு மேசைக் கரண்டி
ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
சுக்குப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தைப் பொடி செய்து, இளம்சூடான நீரில் கரைத்து வடிகட்ட வேண்டும். கோதுமை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, உப்பு, சுக்குத் தூள் முதலியவற்றை கரைத்து வைத்த வெல்லத்துடன் சேர்த்துக் கரைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், அப்பத்துக்காகத் தயார் செய்த கோதுமை மாவை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து, சிறு வட்டமாக ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் கண் கரண்டியால் நன்றாக அழுத்தி விட்டு, மறுபுறம் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.
அப்பக் குழி பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து காய்ந்ததும், அந்தக் குழிகளில் கரண்டியால் இந்தக் கோதுமை அப்பம் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
ஆர். ஜெயலெட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

