தக்காளிப் பழ கொத்சு
தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி இலை, பச்சை மிளகாய் இவற்றைத் தனித்தனியாகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளிப் பழ கொத்சு
தேவையான பொருள்கள்:
தக்காளிப் பழம் - 400 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - இரண்டு பற்கள்
கொத்துமல்லி இலை - ஒரு பிடி
கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
புளி - சிறு உருண்டை
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி இலை, பச்சை மிளகாய் இவற்றைத் தனித்தனியாகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியைக் கையால் நன்கு அழுத்திப் பிசைய வேண்டும்.
இதனுடன் மஞ்சள் பொடி, பொடி உப்பு, மிளகாய்ப் பொடி, புளியை கெட்டியாக எடுத்த சாறு இவற்றைச் சேர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய வைத்து கடுகு , சீரகம், காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றாகப் போட்டு, அது பொரிந்த பிறகு உளுந்தம் பருப்பை போடவேண்டும்.
அதுவும் பொன் நிறமானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு முறை கிளறி வெங்காயம், பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டு இவற்றை ஒன்றாகப் போட்டு வதங்கியதும், ரெடியாக உள்ள தக்காளிக் கலவையைப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி மூடி வைத்து, பத்து நிமிடம் நன்றாகக் கொதித்த பின் இறக்க வேண்டும்.
கொதிக்கும் பொழுது அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளற வேண்டும். தக்காளிப் பழ கொத்சு சுலபமாகச் செய்துவிடலாம். சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

