இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

பைத்தானி புடவைகள்

மகாராஷ்டிராவின் அரசு பட்டுச் சேலையான பைத்தானி, பல நூற்றாண்டுகள் மன்னர் குடும்பத்தினர் மட்டும் அணியும் புடவையாக இருந்தது.

Published On :

மகாராஷ்டிராவின் அரசு பட்டுச் சேலையான பைத்தானி, பல நூற்றாண்டுகள் மன்னர் குடும்பத்தினர் மட்டும் அணியும் புடவையாக இருந்தது. தற்போது மக்களிடம் பணப் புழக்கம் அதிகரித்ததும் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.

இது எயோலா, பைத்தானைச் சுற்றி நெய்யப்படுகிறது. சாய்வான சதுர வடிவ பார்டருக்காகவும், பல வண்ண திரைச்சீலை நுட்பத்தில் வரையப்பட்ட மயில்கள், தாமரைகள், கிளிகள் நிறைந்த முந்தானைக்காகவும் இரு தனித்துவமான அடையாளங்களை வைத்து இதனை அறியலாம்.

இந்தச் சேலைகள் ஓவியங்கள்போல் தோற்றமளித்தாலும் ஒவ்வொரு வரியும் நூலால் நெய்யப்பட்டது. பைத்தானி என்ற பெயர், கோதாவரி நதிக்கரையில் உள்ள பைத்தான் என்ற இடத்தின் பெயரால் உருவானது. இது தக்காணத்தின் பழைமையான நெசவு மையங்களில் ஒன்று.

இதன் ஒவ்வொரு வண்ணமும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளதுடன் கைகளால் பின்னப்படுகிறது. இதனால் பரம்பரை பைத்தான் புடவைகள் நெய்யப்படுவதற்கு பல மாதங்கள் ஆகின்றன. பாரம்பரிய பைத்தான்களை அணியும்போது நிறம் மாறுகின்றன. உடல் ஒரு நிறத்திலும், பளபளப்பு வேறொரு நிறத்திலும் காட்சி அளிக்கும். ஜரியின் உள்புறத்தில் எனாமல் பாணியில் செய்யப்பட்ட வண்ணமயமான வேலைப்பாடுகள் இதன் செழுமையான காட்சிக்கு ஒரு காரணம்.

பைத்தானி புடவைகள் தீபாவளி, திருமணம் போன்ற விசேஷ நாள்களில் அணியும் பிரத்யேகப் புடவையாகும். கைத்தறிப் புடவைகளில் மிகவும் தரமுள்னவை லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவதுண்டு. சூரத்தில் இயந்திரங்களில் தயாராகி வரும் பைத்தான்கள் ரூ.1350 முதல் ரூ.2,700 ரூபாய் விலைகளில் கிடைக்கும். உண்மையில் இது மல்பேரி பட்டு, தங்க ஜரிகை கொண்ட பட்டுப்புடவை. விலைக்கேற்ப ஆடம்பரம் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.