பள்ளிக் கூடம் விட்டனர்
பாலர்கள் ஓடி வந்தனர்
வீட்டினுள்ளே நுழைந்ததும்
வீசி பையை எறிந்தனர்!
கையை காலைக் கழுவியே
உடையை மாற்றிக் கொண்டனர்
வீட்டை விட்டு ஓடினர்
வீதியில் ஒன்று கூடினர்!
கபடி ஆட்டம் ஆடினர்
காக்காய் ஓட்டம் ஓடினர்
கிரிக்கெட் கூட ஆடினர்
கோலி கில்லி அடித்தனர்!
பந்து வீசிப் பிடித்தனர்
பம்பரம் கூடச் சுற்றினர்
பட்டம் விட்டு மகிழ்ந்தனர்
பாண்டி ஆட்டமும் ஆடினர்!
ஆட்டம் எல்லாம் முடிஞ்சாச்சு
அவரவர் வீட்டிற்குச் சென்றாச்சு
பாங்காய் பையை எடுத்தாச்சு
பாடம் படிக்க அமர்ந்தாச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








