ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விடுகதைகள்

1.  அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?   2.  பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ. அது என்ன?   3.  தச்சன் செய்யாத கதவு, மூடினாலும் திறந்தாலும் சப்தம் வராத கதவு. அது என்ன?  4.  முதுகை தொட்டால் மூச்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:50 pm

1.  அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?

  2.  பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ. அது என்ன?

  3.  தச்சன் செய்யாத கதவு, மூடினாலும் திறந்தாலும் சப்தம் வராத கதவு. அது என்ன?

 4.  முதுகை தொட்டால் மூச்சு விடுவான்: பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?

  5.  பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?

  6.  சிகப்பு பைக்குள் தங்க காசுகள். அது என்ன?

 7.  அச்சு இல்லாத சக்கரம்; அழகு காட்டும் சக்கரம். அது என்ன?

 8.  வெளியில் விரியும்; வீட்டில் சுருங்கும். அது என்ன?

 9.  மரம் உண்டு, இலை இல்லை; கொடி உண்டு, பூ இல்லை. அது என்ன?

10.  கிணற்றுக்குள்ளே கிண்ணம் மிதக்குது. அது என்ன?

11.  வட்ட வட்ட பாய்; வாழ்வு தரும் பாய்; ஊர் சுற்றும் பாய். அது என்ன?

12.  பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல். அது என்ன?

13.  அவள் பறக்கும் போது தீப்பொறி பறக்கும். அது என்ன?

14.  "அடியடா பிடியடா' என்பவன் அறையை விட்டு வெளியே வரமாட்டான். அவன் யார்?

15.  வாய் பூ; வாடாத பூ. அது என்ன?

விடைகள் :

1.தலைவகிடு 2.வாழைப்பூ 3.கண் இமை

4.ஆர்மோனியம் 5.வெண்டைக்காய் 6.மிளகாய்

7.வளையல் 8.குடை 9.மெழுகுவர்த்தி 10.முழுநிலா

11.ரூபாய் 12.கிளி  13.மின்மினிப் பூச்சி

14.நாக்கு 15.சிரிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.