ர ஞ்சிதம் டீச்சர் பள்ளி முடிந்ததும், தனது வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்குச் சென்றார். அப்போது, மார்க்கெட்டிலுள்ள காய்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். ஒல்லி முருங்கைக்காய், குண்டு பூசணிக்காயைப் பார்த்து கேட்டது, ""என்னக்கா... இன்னைக்கு எல்லா காய்களும் ரொம்ப சந்தோஷமா துள்ளி துள்ளி குதிக்கிறாங்க?''
அதற்குப் பூசணிக்காய் சொன்னது, ""இன்னைக்கு நம்ம ரஞ்சிதம் டீச்சர் காய்கறிகள் வாங்க வந்திருக்காங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. தன்னிடம் படிக்கும் பிள்ளைகளை அடிக்கவே மாட்டாங்க. அவங்க எப்போதும் அன்போடும், பரிவோடும் பாடங்களை கதைகள் சொல்ற மாதிரி சொல்லிக் கொடுப்பாங்க. அதனாலதான், இந்தக் காய்களுக்கெல்லாம் அவங்களைப் பார்த்தாலே ரொம்ப சந்தோஷப்படுதுங்க'' என்றது.
அப்போது, ""இதோ பார்... நான்தான் சிவப்பா மொழு மொழுன்னு அழகா இருக்கேன். என்னைத்தான் டீச்சர் வாங்குவாங்க'' என்றது தக்காளி.
""நீ சிவப்பா இருந்தாலும் ரொம்ப சீப்பா நடந்துக்குவே. உன்னை நம்பவே முடியாது. ஒருநாள் உன் மதிப்பு வானத்தை எட்டும். இன்னொரு நாள் அதல பாதாளத்திற்கு விழுந்துடுவே. நான்தான் சிவப்பாவும், ஸ்மார்ட்டாவும் இருக்கேன். டீச்சரம்மாவுடைய குழந்தைகள் என்னை பச்சையாகவும் விரும்பி சாப்பிடுவாங்க'' என்றது காரட்.
உடனே வெண்டைக்காய் எழுந்து, ""நீங்க சிவப்பா இருந்தாலும் என்னைத்தான் எல்லோரும் விரும்புவாங்க. ஏன்னா... என் தலையிலே கிரீடம் இருக்கு. மேலும், நான் பெண்களின் கைவிரல்கள் மாதிரி அழகா இருக்கிறதாலேதான் என்னை ஆங்கிலத்தில் "லேடீஸ் ஃபிங்கர்ஸ்'னு செல்லமா அழைக்கிறாங்க'' என்றது.
இதைக் கேட்டதும் சட்டென கோபம் வந்தது கத்திரிக்காய்க்கு. ""என்ன உனக்கு மட்டும்தான் கிரீடம் இருக்கா? எனக்கும்தான் இருக்கு. நீ கிரீடம்ன்னு சொல்லி பெருமை அடிச்சிக்கிறீயே, அதைத்தான் உன்னை வாங்குகிறவங்க முதலில் வெட்டுறாங்க. அது மட்டுமா, உன்னை யாராவது தொட்டுத் தடவி வாங்கறாங்களா. கிள்ளிக் கிள்ளி தான் வாங்கறாங்க. இதிலே கிரீடம் இருக்குன்னு ஜம்பம் வேற. என்னிடம் தான் பெரிய கிரீடம் இருக்கும். என்னைத்தான் குழந்தைகள் எல்லாம் விரும்புவாங்க. நான் இல்லாத சாம்பாரா? நான் இல்லாத கல்யாணமா? ரஞ்சிதம் டீச்சர் என்னைத்தான் வாங்குவாங்க'' என்றது கத்திரிக்காய்.
""அது கிரீடமா... நல்ல சர்க்கஸ் கோமாளிங்க போட்டுத் தூக்கி எறிகிற குல்லா மாதிரி இருக்கு'' என்றது வெங்காயம்.
உடனே கோஸ் எழுந்து, ""ஏய்... வெங்காயம் சும்மா இரு. நீ உன்னை வாங்குகிறவங்களை அழ வைக்கிறது போதாதா. ஏதாவது சொல்லிக் குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தி எங்களையும் அழ வைக்காம பேசாம வாயை மூடு'' என்றது.
இதைக் கேட்ட உருளைக்கிழங்குக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உருளைக்கிழங்கு எழுந்து, ""ஏய்... கோஸ், வாயை க்ளோஸ் பண்ணு. இல்லாட்டி உன் மேலே கேஸ் போடுவேன். குழந்தைகள் எல்லாம் என்னைத்தான் விரும்பி சாப்பிடுவாங்க. நான் பல்லுக்கு வேலையே கொடுப்பதில்லை'' என்றது.
இதையெல்லாம் அமைதியாகவும், அடக்கமாகவும் கேட்டுக் கொண்டிருந்த பாகற்காயும், பீட்ரூட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் கொல்லென்று சிரித்தது. அதைப் பார்த்த பச்சை மிளகாய்க்கு கோபம் கோபமாக வந்தது. உடனே பச்சை மிளகாய், ""அசிங்கமா, சொரி சொரியா அலங்கோலமா, விகாரமா, நினைச்சாலே வாய் கசக்கும் இந்தப் பாகற்காய்க்கும், கோணமாணலா இருந்துக் கொண்டு குழந்தைகள் வெறுக்கும் கருப்பி பீட்ரூட்டுக்கும் என்ன திமிரு பார்த்தியா? நம்மைப் பார்த்து சிரிக்கிதுங்க'' என்றது.
அப்போது, ரஞ்சிதம் டீச்சர் கடை அருகே வந்து, எல்லா காய்களையும் ஒரு முறை பார்த்தார்.
""என்ன டீச்சர் பாக்கறீங்க, எல்லா காய்களும் விலை கம்மிதான்'' என்றார் கடைக்காரர்.
டீச்சருடைய கண்கள் எல்லா காய்களையும் ஒரு முறை பார்த்தது. டீச்சருடைய கை நேராக பாகற்காய் பக்கமும், பீட்ரூட் பக்கம் சென்றது. அவர் வேறு எந்தக் காய்களையும் வாங்காமல் பாகற்காயையும், பீட்ரூட் மட்டுமே வாங்கினார்.
""ஏன் டீச்சர்... இவ்வளவு காய்கள் இருக்கும் போது, இரண்டு காய்களை மட்டுமே வாங்குறீங்களே?'' என்று கேட்டார் கடைக்காரர்.
அதற்கு டீச்சர், ""இல்லப்பா... எல்லா காய்களிலும் இருக்கிற சத்து மொத்தமா இந்தப் பாகற்காய்லயும், பீட்ரூட்டிலயும் இருக்கு. அது மட்டுமா, பாகற்காய் வயிற்றிலே இருக்கிற பூச்சிகளை எல்லாம் கொல்லும். பீட்ரூட் ரத்த சோகையைப் போக்கி, ரத்தத்தை விருத்திச் செய்யும். குழந்தைகளின் ஞாபகசக்தியையும் அதிகரிக்கும். என்னோட குழந்தைகள் இந்தக் காய்களைத்தான் விரும்பி சாப்பிடுவாங்க'' என்றார்.
இதைக் கேட்ட மற்ற காய்கள் அனைத்தும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டன. பாகற்காயும், பீட்ரூட்டும் ஜம்முன்னு டீச்சர் பையிலே போய் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே டாடா காட்டியது. இதைப் பார்த்த மற்ற காய்களின் முகம் வெட்கத்தால் வாடி வதங்கியது.
அப்போது முருங்கைக்காய், பூசணிக்காயிடம் சொன்னது. ""பார்த்தியாக்கா... இந்தப் பாகற்காய்க்கும், பீட்ரூட்டுக்கும் வந்த வாழ்வை'' என்றது.
உடனே பூசணிக்காய், ""நாம் யாரையும் அவங்க புறத்தோற்றத்தை வச்சி மதிப்பிடக் கூடாது. எட்டிக்காய் கூட பார்க்க அழகாகத்தான் இருக்கு. ஆனா, அதை யாராவது சாப்பிடறாங்களா. பலாப்பழம் வெளியே பார்க்கும் போது எவ்வளவு முள்முள்ளா இருக்கு. ஆனால், சுவை தரும் பழங்கள் அதனுள் இல்லையா. கடினமான கற்பாறையிலிருந்து தான் அழகான கடவுள் சிலைகள் செதுக்கப்படுகின்றன. எனவே, நாம் ஒருவரின் பேச்சையும், தோற்றத்தையும் வெச்சுப் பழகக் கூடாது.
நாம் ஒருவரிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பணிவா இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை. அகம்பாவமும், ஆணவமும் கூடாது. அடக்கம்தான் எப்போதும் வேண்டும். தன்னைத்தானே வியந்து புகழக் கூடாது. அது பொறாமைத் தீயை வளர்க்கும். அது பிறரை எரிப்பதோடு, கொண்டவரையும் எரித்து விடும்'' என்றது.
""ஆமாக்கா..! இன்னைக்கு இதை நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு தூக்கம் தூக்கமா வருது நான் போய் படுத்துக்கிறேன்'' என்றது முருங்கைக்காய்.
""தூங்கு தூங்கு, ஆனா சோம்பேறியா மாறிடாதே'' என்றது பூசணிக்காய் சிரித்துக் கொண்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


