சிறுவர் பாடல்: ஆட்டுக்குட்டி
துள்ளித் துள்ளி ஆட்டுக்குட்டி தொழுவில் ஓடுது தொட்டதுமே விலகி ஓடி முறைத்துப் பார்க்குது! கீரை முளைத்த பாத்திக்குள்ளே தாவி ஓடுது சத்தம் போட்டு தடுப்பதற்குள் தளிரை மேயுது! உலர வைத்த நெற்பரப்பில் காலை வை


துள்ளித் துள்ளி ஆட்டுக்குட்டி
தொழுவில் ஓடுது
தொட்டதுமே விலகி ஓடி
முறைத்துப் பார்க்குது!
கீரை முளைத்த பாத்திக்குள்ளே
தாவி ஓடுது
சத்தம் போட்டு தடுப்பதற்குள்
தளிரை மேயுது!
உலர வைத்த நெற்பரப்பில்
காலை வைக்குது
அக்கம் பக்கம் சிதறிவிழ
ஆட்டம் போடுது!
நாய்க் குட்டிக்கு வைத்த தட்டை
நக்கிப் பார்க்குது
தண்ணீர் இல்லாத் தொட்டிக்குள்ளே
தலையைச் சாய்க்குது!
அம்மா ஆடு அழைத்ததுமே
திரும்பிப் பார்க்குது
அடுத்த நொடியே தாவி வந்து
அருகில் நிற்குது!
பாவண்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...