காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுவர் பாடல்: சிட்டுக் குருவி!

சின்னச் சின்ன சிட்டுக் குருவி சிறகு விரித்து பறக்கும் குருவி வண்ண வண்ண சாம்பல் நிறத்தில் வனப்பாய் வானில் பறக்கும் குருவி! கொட்டிக் கிடக்கும் தானியக் குவியலை கூடி வந்து கூடி நின்று தொட்டு தொட்டு கொத்தி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:16 am

நாகூர் அமீன்

சின்னச் சின்ன சிட்டுக் குருவி

சிறகு விரித்து பறக்கும் குருவி

வண்ண வண்ண சாம்பல் நிறத்தில்

வனப்பாய் வானில் பறக்கும் குருவி!

கொட்டிக் கிடக்கும் தானியக் குவியலை

கூடி வந்து கூடி நின்று

தொட்டு தொட்டு கொத்தித் தின்று

கூடி பறந்து கூடு செல்லும்!

ஒன்றாய் வராமல் ஒன்றோடொன்று

சேர்ந்து வரும் சிட்டுக் குருவி

நன்றாய் செப்பும் பாடம் செவியுறுவீர்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.