எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுவர் பாடல்: பயணம்!

படித்த மனிதர் ஒருவரும் படியா மனிதர் ஒருவரும் பயணம் போக நினைத்தனர்! பேருந்து நிலையம் சென்றனர் செல்லும் ஊரினை படித்தவர் தேர்வு செய்து அமர்ந்திட்டார்! பச்சை சிவப்பு வண்ணங்கள் செல்லும் ஊரைக் காட்டுமா? படி

Updated On :20 செப்டம்பர் 2012, 2:16 pm

படித்த மனிதர் ஒருவரும்

படியா மனிதர் ஒருவரும்

பயணம் போக நினைத்தனர்!

பேருந்து நிலையம் சென்றனர்

செல்லும் ஊரினை படித்தவர்

தேர்வு செய்து அமர்ந்திட்டார்!

பச்சை சிவப்பு வண்ணங்கள்

செல்லும் ஊரைக் காட்டுமா?

படியா மனிதர் குழம்பினார்

தவித்து தவித்து புலம்பினார்!

படித்த மனிதர் உதவிட

பயணம் செய்யும் ஊரினை

கண்டு தெளிந்து தேறினார்!

கண்கள் இருந்தும் பயனற்று

போனதை உணர்ந்து வருந்தினார்

கண்கள் இரண்டும் கல்வியால்

துலக்கம் பெறுமே உண்மையாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.