ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாறும் மனிதர்கள்

சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், "நீ அடுத்த பிறவியில் மிருகமாய்... பறவையாய்... பாம்பாய்... பிறந்திடுவாய்' என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:13 pm

செல்வகதிரவன்

சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், "நீ அடுத்த பிறவியில் மிருகமாய்... பறவையாய்... பாம்பாய்... பிறந்திடுவாய்' என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

 ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருகமாய்... பறவையாய்... பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது.

 மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்:

 * வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.

 * உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

 * மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

 * அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.

 * பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.

 * கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன் வேட்டைநாய்.

 * தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.

 * மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.

 * வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.

 * தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.

 *  மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.