தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கடி

""எதுக்கு டாக்டர் இன்னமும் அகலமா வாயைத் திறக்கச் சொல்றீங்க?'' ""உள்ளே விழுந்த என்னோட டார்ச் லைட்டை எடுக்கத்தான்!'' எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி. *  ""குரங்குகிட்டே "செல்' இருந்தாலும், அத வச்சி குரங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:38 am

தமிழாகரர் தெ. முருகசாமி

""எதுக்கு டாக்டர் இன்னமும் அகலமா வாயைத் திறக்கச் சொல்றீங்க?''

""உள்ளே விழுந்த என்னோட டார்ச் லைட்டை எடுக்கத்தான்!''

எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

*  ""குரங்குகிட்டே "செல்' இருந்தாலும், அத வச்சி குரங்கு யார்கிட்டேயும் பேசமுடியாது!''

""ஏன்?''

""குரங்குகிட்டே இருக்கிறது "விலங்கு செல்'லாச்சே!''

நா. ஆமினத்து ஜாக்ரினா, 46, புது கிழக்குத் தெரு, கீழக்கரை

இராமநாதபுரம் மாவட்டம் - 623517.

*  ""அந்த ஹோட்டல்லே சாப்பிட்டா நாள் முழுக்கச் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்!''

""அடடா! அவ்வளவு டேஸ்டா இருக்குமா?''

""டேஸ்டா இருந்தாத்தான் உடனே சாப்பிட்டுடலாமே!''

அ. அழகப்பன், 1051, குமரன் தெரு, காளையார்கோவில்

சிவகங்கை மாவட்டம் - 630 551.

""வெள்ளை மாத்திரை கொஞ்சம் கசக்குது. சிவப்பு மாத்திரை கொஞ்சம் இனிக்குது!''

""சரி, இதை எதுக்கு என்கிட்டே வந்து சொல்றே?''

""நீங்கதானே டாக்டர் மாத்திரை சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்லச் சொன்னீங்க!''

ஆ. துர்காதேவி, பெரிச்சிப்பாளையம்.

""ஆபீஸ்ல யாராவது தூங்கினா என் கிட்டே வந்து சொல்லு''

""சரி சார்!''

""நான் தூங்கிக்கிட்டு இருந்தாக்கூடப் பரவாயில்லை. என்னை எழுப்பி சொல்லு!''

பி. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

""நீ செஞ்ச குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?''

""அதையெல்லாம் படிச்சிருந்தா நான் ஏன் ஐயா இந்தத் தொழிலுக்கு வரப்போறேன்!''

மெ. அ. கா. பாத்திமா, காயல்பட்டினம் .

வாரம் 2 டி-சர்ட் பரிசு: நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும்

பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.