தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முத்து கதை

ஆசை!    ஓர் ஊருக்கு ஒரு துறவி வருகை தந்தார். அவருடைய அறிவுரையைக் கேட்க பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர்.  துறவி தனது உரையில், ""எந்தச் சுழ்நிலையிலும் மனிதன் ஆசை கொள்ளவே கூடாது! ஆசை ஏற்பட ஏற்படத் துன்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:31 pm

செவல்குளம் ஆச்சா

ஆசை!

 ஓர் ஊருக்கு ஒரு துறவி வருகை தந்தார். அவருடைய அறிவுரையைக் கேட்க பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர்.

 துறவி தனது உரையில், ""எந்தச் சுழ்நிலையிலும் மனிதன் ஆசை கொள்ளவே கூடாது! ஆசை ஏற்பட ஏற்படத் துன்பங்கள் மேன்மேலும் பெருகிக் கொண்டே இருக்கும். ஆசையை உதற உதற மகிழ்ச்சி கூடிக் கொண்டே போகும்'' என்று குறிப்பிட்டார்.

 உடனே, கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து, ""துறவியாரே! நான் ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறேன். அந்தப் பொருள் எனக்கு கிடைக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் நான் மகிழ்ச்சிதானே அடைவேன்? அப்படியிருக்க ஆசையினால் எப்படித் துன்பம் ஏற்படும் என்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

 உடனே துறவி, ""கிடைத்த பொருளோடு ஆசை மனநிறைவு அடைவதே இல்லை! மேன்மேலும் பொருள்கள் மீது ஆசை வளர்ந்துகொண்டேதான் இருக்கும்! நாம் விரும்பும் ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது என்பது கடல்நீரைக் குடித்துத் தாகத்தைப் போக்க நினைப்பது போன்றதாகும். நாம் மேன்மேலும் தாகத்தால் அவதிப்படுவோமே தவிர, தாகம் ஒருபோதும் அடங்காது!''

 என்று விளக்கமளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.