மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கர்மவீரர் வழி நடப்போம்!

 ஆட்சியில் இருந்த போதிலுமே - ஓர்  அகந்தை மனதில் அண்டாது,  காட்சி அளித்த தலைவர் அவர் - காம  ராஜர் என்பதை மறக்காதே!    மதிய உணவுத் திட்டத்தால்  மாணவர் படிக்கச் செய்தவரை  நதிகளில் அணைகள் அமைத்தவரை  நன்றி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:23 pm

 ஆட்சியில் இருந்த போதிலுமே - ஓர்

 அகந்தை மனதில் அண்டாது,

 காட்சி அளித்த தலைவர் அவர் - காம

 ராஜர் என்பதை மறக்காதே!

 மதிய உணவுத் திட்டத்தால்

 மாணவர் படிக்கச் செய்தவரை

 நதிகளில் அணைகள் அமைத்தவரை

 நன்றியுடன் நீ நினைத்திடணும்!

 பதவிகள் தேடி வருகையிலும் - மனம்

 பதறாது உழைத்த பேராளர்

 நிதமும் மக்கள் நலம் கருதி - தன்

 குடும்பம் மறந்த தவசீலர்!

 எளிமை வாழ்வு, உயர் உள்ளம் - சொல்

 என்றும் மாறாப் பெருந்தன்மை

 தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்

 தேசம் காத்த தலைவர் அவர்!

 நாட்டுக்காக வாழ்ந்தவரை - நாம்

 என்றும் மறக்கக் கூடாது!

 வீட்டுக்காகப் படித்திடணும் - பின்

 நாட்டை நாமும் காத்திடணும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.