
புள்ளிச் சில்லை
இந்தியா, இலங்கை, கிழக்கு இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகம் காணப்படும். விவசாய நிலங்களிலும் தோட்டங்களிலும் இதை அதிகமாகப் பார்க்கலாம்.
மார்புப் பகுதியில் செதில்களைப் போன்ற இறகுகளைக் கொண்டது. இதனால் உடலில் புள்ளிகள் இருப்பதைப் போலத் தோன்றும். 11 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும் சிறிய பறவை. அலகு கருப்பாக இருக்கும். தலை மட்டும் பழுப்பு நிறம்.
தானியங்களைக் கொத்தித் தின்பதால் இந்தப் பறவை விவசாயிகளின் விரோதியாகக் கருதப்படுகிறது. இதன் குரலோசை விசிலடிப்பது போல இருக்கும்.
வீடுகளில் செல்லப் பறவைகளாக கூண்டுகளில் வளர்க்க மிகவும் எளிது.
செந்நீலக் கொக்கு
ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அதிகம் காணப்படும் கொக்கு இனப் பறவை. பெரும்பாலும் பருவ காலங்களில் இடப்பெயர்ச்சி செய்யும் பறவையினம்.
அளவில் பெரியது. 78 முதல் 90 செ.மீ. வரை நீளம் இருக்கும். நிற்கும்போது இதன் உயரம் 94 செ.மீ. சிறகை விரித்தால் 120 முதல் 152 செ.மீ. வரை நீளும். உடல் செந்நிறமும் நீலமும் கலந்த கலவை. மூக்கு மஞ்சள் நிறத்தில் நீண்டு இருக்கும். பெரும்பாலும் குழுக்களாக வாழும். மீன்கள், தவளைகள் மற்றும் நீர்ப்பூச்சிகள் இதன் உணவு.
கழுத்தை வளைத்து நீட்டி (ஆங்கில எழுத்து எஸ் வடிவத்தில்) சற்றே மெதுவாகப் பறக்கும்.
வாலாட்டி
பாடும் பறவை. எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும். வாலை விடாது ஆட்டிக் கொண்டிருக்கும்.
மெலிதான உடம்பு. 15 முதல் 17 செ.மீ. வரை நீளமிருக்கும்.
மத்திய ஆசியாவில் அதிகம் காணப்படும். குளிர்காலங்களில் தெற்கு ஆசியாவுக்கு இடப் பெயர்ச்சி செய்யும். ஓர் இடத்தில் சேர்ந்தாற்போல ஒரு வாரம் கூடத் தங்காது. இடம் மாறி மாறிப் பறந்து கொண்டேயிருக்கும். பெரும்பாலும் நீர் நிலைகளில் காணப்படும்.
புள்ளிகள் போட்ட முட்டைகளை இடும். பூச்சிகள் பிடித்த உணவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.