ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோபம்!

புதுவை, குயவர்பாளையத்தில் வசித்த ஒரு பொம்மை செய்பவரிடம் பாரதமாதா பொம்மை செய்து தருமாறு கேட்டார் வ.வே.சு.ஐயர். அணிகலன்கள் எதுவுமில்லாமல் கூந்தல் முன்புறம் விரிந்து பரந்து கிடப்பதுபோல அமைய வேண்டும் என்ற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:31 pm

புதுவை, குயவர்பாளையத்தில் வசித்த ஒரு பொம்மை செய்பவரிடம் பாரதமாதா பொம்மை செய்து தருமாறு கேட்டார் வ.வே.சு.ஐயர். அணிகலன்கள் எதுவுமில்லாமல் கூந்தல் முன்புறம் விரிந்து பரந்து கிடப்பதுபோல அமைய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரும் அதுபோல பொம்மையை வடிவமைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பாரதியார், ""ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கோபமாகக் கேட்டார்.

""அந்நியர்கள்தான் எல்லா செல்வங்களையும் சுரண்டிச் சென்று விட்டார்களே!'' என்றார் வ.வே.சு.ஐயர் வருத்தத்துடன்.

கோபம் குறையாத பாரதி, ""பாரதமாதாவுக்கு என்ன குறை? அந்நியர்கள் எல்லாவற்றையுமா எடுத்துக் கொண்டுவிட்டார்கள்? சிதறிக்கிடந்த ஒன்றிரண்டைத்தானே பொறுக்கிக் கொண்டார்கள்! வற்றாத கங்கையும் காவிரியும் இன்னும் இருக்கின்றதே! கலை, கவிதை போன்ற செல்வங்கள் அப்படியே இருக்கின்றனவே! அவைகள்தானே பாரதமாதாவுக்கு அணிகலன்கள். எனவே பொம்மைக்கு எல்லா அலங்காரங்களையும் செய்யுங்கள்'' என்று அதட்டினார். அவர் ஆசைப்படியே பொம்மை அழகாக சகலவித அலங்காரங்களுடன் அமைக்கப் பெற்றது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.