நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெரிந்து கொள்ளுங்கள்

தொட்டாற்சிணுங்கி தொட்டாற்சிணுங்கி என்று ஒரு செடியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது கை பட்டவுடன் இலைகள் தாமாகவே மூடிக் கொள்ளும். இந்தச் செடியின் தாவரவியல் பெயர் மிமோசா புடிகா என்பதாகும். இது ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:55 am

நெ. இராமன்

தொட்டாற்சிணுங்கி

தொட்டாற்சிணுங்கி என்று ஒரு செடியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நமது கை பட்டவுடன் இலைகள் தாமாகவே மூடிக் கொள்ளும்.

இந்தச் செடியின் தாவரவியல் பெயர் மிமோசா புடிகா என்பதாகும். இது நமது நாட்டில் மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது. உங்களுடைய வீட்டுக்கருகில் ஏதாவது குறுஞ்செடிகளும் புற்களும் நிறைந்த பகுதிகள் இருந்தால், சற்றே கவனித்துப் பாருங்கள்... அங்கே நிச்சயம் இந்தச் செடி இருக்கும். சிறிய குத்துச் செடியாக, தரை முழுவதும் பரவிக் கிடக்கும். சிறிய முற்களும் ஆங்காங்கே காணப்படும்.

இலைகள் இறகு வடிவில் கூட்டாகக் காணப்படும். இந்த இலைகளுக்குத்தான் உணர்வு அதிகம். அதனால் நாம் தொட்டவுடன் அவைகள் மூடிக் கொள்கின்றன. இந்தத் தன்மைதான் இச் செடிக்கு தொட்டாற்சிணுங்கி என்று பெயர் வரக்காரணம்.

இதனுடைய மலர்கள் சிறிதாக பஞ்சு போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இந்தச் செடியில் கனிகளையும் பார்க்கலாம். அவை தட்டையாக இருக்கும்.

இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகளின் சாறு சைனஸ், மூலநோய் மற்றும் காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

வேர், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றது.



நம்பர் வண்ணத்துப் பூச்சி

கோஸ்டா ரிகா நாட்டில் ஒரு வகை வண்ணத்துப் பூச்சி இருக்கின்றது. இதன் பெயர் நம்பர் வண்ணத்துப் பூச்சி. இப் பூச்சியின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரண்டாவது சிறகின் அடிப்பாகத்தில் 88 என்ற எண் தெளிவாகத் தெரிவதால் இதற்கு இந்தப் பெயர்!

விநோத விலங்குகள்

* ஓடும் மனிதனை, யானையால் நடந்து சென்றே பிடித்துவிட முடியும்.

* உலகில் எந்தப் பறவைக்கும் வியர்வை சுரப்பிகள் கிடையாது.

*  மனித இரத்தத்தோடு ஒத்துப்போகக்கூடிய இரத்தம் விலங்குகளில் குரங்குகளுக்கு மட்டுமே உள்ளது.

* ஒரு சிலந்தியின் வலையிலுள்ள நூலை இழுத்தால் சுமார் 2000 மைல் நீளத்துக்கு வரும்.

* குளிர் காலத்தில் குயில் கூவாது.

* கழுகு எதையும் கொன்று சாப்பிடாது. இறந்ததைத்தான் சாப்பிடும்.

* இரண்டு ஆண்டுகளுக்குச் சாப்பாடு இல்லா விட்டால் கூட ஆமைகள் உயிர் வாழும்.

தொகுப்பு: சு.இலக்குமண சுவாமி,

திருநகர்.

தேனீ செய்திகள்

* தேனீ எறும்பு இனத்தைச் சேர்ந்தது.

* தேனீயின் உடலில் 12 வரிகள் இருக்கும்.

* தேனீக்குக் காதுகள் கிடையாது.

* தேனீயின் சிறகுகள் ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை அடித்துக் கொள்கின்றன.

* தேனீ மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது.

* தேனீக்கள் தமக்கே உரிய நடன அசைவுகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

* இராணித் தேனீ ஒரு நாளைக்கு 3000 வரை முட்டைகள் இடும்.

* தேனீக்கு இரண்டு வயிறுகள் உள்ளன .

* 500 கிராம் தேனுக்காக சுமார் 20 லட்சம் பூக்களைச் சுவைத்துப் பார்க்கிறது தேனீக் கூட்டம்.

மொழி அறிவோம்...

* உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீனம்.

* இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி.

* அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியா.

* இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

* உலகில் மொத்தம் 2796 மொழிகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

* இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது.

* இந்தியாவில் மொழிவாரியாகப் பிரிந்த முதல் மாநிலம் ஆந்திரம்.

* ஏட்டளவில் மட்டுமே பயன்படுத்தப்படும் மொழி சமஸ்கிருதம்.

* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய ஐந்தும் திராவிட மொழிகளாகும்.

* இந்தியாவின் மிகத் தொன்மையான மொழி தமிழ்.

ஆர்யபட்டர்

அறிவியல் மேதை ஆர்யபட்டர் கி.பி.476}ம் ஆண்டில் தோன்றினார். உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மெüரிய மன்னர் சந்திரகுப்தரால் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வானவியல் குறித்த கோட்பாடுகளைக் கொண்ட ஆர்யபட்டியம் என்னும் நூலைத் தமது 23}ம் வயதில் எழுதினார்.

இன்றும் விண்வெளிக் கிரகங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இவரது நூலே அடிப்படையாக இருக்கின்றது.

இவரது ஆற்றலைப் போற்றும் வகையில் இந்தியாவின் முதல் செயற்கைக் கோளுக்கு ஆர்யபட்டா என்று பெயர் சூட்டப்பட்டது.

பூமி உருண்டை வடிவானது; அது தன்னுடைய அச்சில் சுழல்வதால் இரவும் பகலும் ஏற்படுகின்றது; கிரகங்களின் சுழற்சி; உறுதி செய்யமுடியாத சமன்பாடுகளுக்குத் தீர்வு காணும் முறை - இப்படிப் பல ஆய்வுகள் செய்து உண்மை நிலையை உலகுக்குச் சொன்ன வானவியல் மேதை ஆர்யபட்டர்.

- செவல்குளம் ஆச்சா.

சாக்லேட்...

விமானத்தில் பயணம் செய்யும்போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா?

சில பயணிகளுக்குத் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின்போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளூகோஸ் இவை வராமல் தடுக்கின்றது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும் சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும் சக்தியையும் அதிகரிக்க சாக்லேட் அல்லது புளிப்புச் சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டை மென்றால், சோர்வு குறைந்து சுறு

சுறுப்பாகத் தேர்வு எழுத முடியும்.

 நன்றி: இளம்பிறை, பிப்ரவரி 2012

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.