குழந்தைப் பாடல்: மழைக்கு எங்கே போவது?
ஆலமரம் சாயுது அத்திமரம் சாயுது அக்கா வீட்டுப் புளியமரம் அடியோடு சாயுது பனைமரம் சாயுது பலாமரம் சாயுது பக்கத்து வீட்டுப் பாக்குமரம் பட்டப்பகலில் சாயுது மாமரம் சாயுது மருதமரம் சாயுது மழை தரும் மரம் மடிந்


ஆலமரம் சாயுது
அத்திமரம் சாயுது
அக்கா வீட்டுப் புளியமரம்
அடியோடு சாயுது
பனைமரம் சாயுது
பலாமரம் சாயுது
பக்கத்து வீட்டுப் பாக்குமரம்
பட்டப்பகலில் சாயுது
மாமரம் சாயுது
மருதமரம் சாயுது
மழை தரும் மரம்
மடிந்தே சாயுது
வேப்பமரம் சாயுது
புங்கமரம் சாயுது
வேலம்மா முருங்கமரம்
வேரோடு சாயுது
பூவரசம் சாயுது
பூத்தமரம் சாயுது
சாயாத மரம்கூட
மனிதரால சாயுது
எல்லாமரமும் சாய்ஞ்சு போனா
ஏற்றம் தரும் மழைக்கு
நாம எங்கே போவது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...