சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பசு

அன்பின் வடிவம் பசுவாகும்அதுநம் தெய்வ வடிவாகும்பச்சைப் புல்லைத் தின்றிடுமே

Updated On :22 பிப்ரவரி 2013, 12:39 pm

அன்பின் வடிவம் பசுவாகும்

அதுநம் தெய்வ வடிவாகும்

பச்சைப் புல்லைத் தின்றிடுமே

பாலைத் தந்து காத்திடுமே!

கொம்புகள் இருக்கும் என்றாலும்

குத்தி விரட்ட நினைக்காது

நம்பும் நமக்கு நாள்தோறும்

நல்லது செய்யும் பகைக்காது!

அன்னை போன்றது பசுவாகும்

அதனை வதைத்தல் மிகப்பாவம்

உன்னை என்னைப் பசியாற்றி

உலகில் காப்பது அதுவாகும்!

செல்வம் பெருக்கும் கோமாதா

சிறப்பைக் கொடுக்கும் என்பதனால்

உள்ளம் தன்னில் அதையென்றும்

உயர்வாய் எண்ணி மதித்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.