நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதவி செய்வாயே!

 கா...கா... என்றே கறைகிறதே காலைப் பொழுதை உரைக்கிறதே

News image
Updated On :18 ஜனவரி 2013, 4:23 am

புலேந்திரன்

 கா...கா... என்றே கறைகிறதே
 காலைப் பொழுதை உரைக்கிறதே
 காக்கை அப்படிச் செய்திடவே
 கட்டளை எவரும் இடவில்லையே!
 
 கொக்கரக் கோ...வென சேவலுமே
 கூவி நேரம் உரைக்கிறதே
 மக்களுக் காகச் செய்எனவே
 மாந்தர் எவரும் சொல்லலையே!
 
 உழவருக் காக நிலத்தினிலே
 உதவி செய்திடும் மண்புழுவை
 உழவர் எவரும் மண்கிளறி
 உதவிடச் சொல்லி அழைக்கலையே!
 
 தேவை உணர்ந்தே மாந்தருக்குச்
 சேவை செய்திடும் அவைபோல
 தேவை யறிந்தே பிறர்க்குதவி
 செய்தே நீயும் மகிழ்வாயே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.