புத்திமான் பலவான்!
ஒருமுறை கிருஷ்ண தேவராயரின் அவையிலிருந்த அமைச்சர்கள், ""நாங்களும் தெனாலிராமன் போல புத்திசாலிகள்தானே! எங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்ட வாய்ப்பு தரக்கூடாதா?'' என்று கேட்டனர்.
இந்த அமைச்சர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்ட அரசர்,
""சரி, உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். எனக்கு ஒரு அடி நீள புகை வேண்டும். கொண்டு வருவீர்களா?'' என்றார்.
அமைச்சர்கள் திகைத்துப் போனார்கள்.
""எப்படிப் புகையைப் பிடிக்க முடியும்? அளக்க முடியும்?'' என்று புரியாமல் குழம்பிப் போய் நின்றனர்.
கடைசியில் அரசர், "'உங்களால் முடியாததால் ராமனை முயற்சி செய்யச் சொல்வோம்....'' என்றவர், ராமனைப் பார்த்து, ""ராமா, நீ தயாரா?'' என்று கேட்டார்.
ராமன் துள்ளிக் குதித்து, ""இதோ கொண்டு வருகிறேன்...'' என்றபடியே ஓடினான்.
சிறிது நேரத்தில் வந்தான்.
ஒரு அடி நீள கண்ணைடிக் குடுவை ஒன்றை எடுத்து, ஊதுபத்தி அருகே கொண்டு சென்று ஒரு பக்கம் மட்டுமே திறந்திருந்த அந்தக் குழாயின் வாய்ப் பகுதியை புகைக்கு நேராகக் காட்டினான். மெல்ல, குழாய் முழுவதும் புகை பரவி நின்றது.
""அரசே, இதோ நீங்கள் கேட்ட ஒரு அடி நீள புகை!'' என்றான் தெனாலிராமன்.
கிருஷ்ணதேவராயர் புன்னைகயுடன், ""எந்தப் பிரச்னையிலும் பயந்துவிடாமல் சமயோசிதமாக செயல்பட்டால் உடனடி தீர்வு கிட்டும்...'' என்றார்.
அமைச்சர்கள் அனைவரும் தலைகளைக் குனிந்து கொண்டனர்.
-அ. யாழினிபர்வதம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


