தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத் திறனாளிகள்...மகத்தான சாதனைகள்!

அப்போது ஹெலன் கெல்லர் ப்ரெயில் எழுத்துகளை டைப் செய்யும் "ப்ரெயில்ரைட்டர்' என்ற கருவியின் மூலம் ப்ரெயில் எழுத்துகளை டைப் செய்யவும் கற்றுக்கொண்டார்.

News image
Updated On :15 மார்ச் 2013, 5:09 am

செவல்குளம் ஆச்சா

ஹெலன் கெல்லர்

அப்போது ஹெலன் கெல்லர் ப்ரெயில் எழுத்துகளை டைப் செய்யும் "ப்ரெயில்ரைட்டர்' என்ற கருவியின் மூலம் ப்ரெயில் எழுத்துகளை டைப் செய்யவும் கற்றுக்கொண்டார்.
 தேர்வு எழுதும்போது (டைப்ரைட்டரின் உதவியோடு) ஹெலன் கெல்லரின் ஆசிரியை ஸல்லீவன் அவருக்கு ஏதாவது உதவிகள் செய்துவிடுவாரோ என்று சந்தேகப்பட்டு, அவருக்குப் பதில் வேறொருவர் உதவியுடன் தேர்வு எழுத வைத்தனர்.
 1904-ஆம் ஆண்டு தன்னுடைய இருபத்துநான்காம் வயதில் சிறப்புத் தகுதியுடன் பட்டப் படிப்பில் ஹெலன் கெல்லர் தேர்ச்சி பெற்றார். அந்தச் சமயத்தில் மிகவும் அதிகக் கல்வித் தகுதி பெற்ற, பட்டப்படிப்பு படித்த பார்வையற்ற, காது கேட்காத மாற்றுத் திறனாளி ஹெலன் ஒருவரே!
 ஹெலன் கெல்லர் தன்னுடைய பேச்சைத் தெளிவாக வெளிப்படுத்த, பேச்சாற்றலை வளப்படுத்தக் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். படிப்படியாக பேசக் கற்றுக் கொண்டார். மேடையில் பேசும் திறனும் பெற்றார்.
 ஹெலன் கெல்லரின் அளப்பரிய ஆற்றலை உலகுக்கு வெளிப்படுத்த உறுதிகொண்ட அவருடைய ஆசிரியை ஆனி ஸல்லீவன் எங்கு சென்றாலும் உடன் சென்றார்.
 சென்ற இடங்களிலெல்லாம் தான் முதலில் சந்தித்த ஹெலனையும் தற்போது அவரிடம் காணப்படும் அசாத்தியத் திறமையையும் வளர்ச்சியையும் எடுத்துக் கூறுவார்.
 அதனைத் தொடர்ந்து ஹெலன் கெல்லர் மேடையில் உரையாற்றுவார். பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளை ஸல்லீவன் மூலம் தெரிந்துகொண்டு பதிலளிப்பார்.
 பார்வையாளர்கள் தாங்கள் காண்பதை, கேட்பதை நம்ப முடியாமல் பிரமித்துப் போயிருப்பர். ஹெலன் கெல்லரின் அதிசய ஆற்றலைப் பற்றிக் கேள்வியுற்ற உலக நாடுகளின் தலைவர்கள், சமூக சேவையாளர்கள், தொழில் அதிபர்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் ஹெலன் கெல்லரைச் சந்தித்து உரையாட மிகவும் ஆர்வம் கொண்டனர். உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து சேவைகள் பல புரிந்தார். எங்கெங்கு சென்றாரோ அங்கெல்லாம் மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக நிதி திரட்டி எண்ணற்ற தொண்டு அமைப்புகளுக்கு உதவினார்.
 தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாகவும் எழுதியுள்ளார். அவரைப் பற்றி திரைப்படமும் வெளிவந்துள்ளது. அவரே திரையிலும் தோன்றியுள்ளார்.
 1932-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கத்தின் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 இரண்டாவது உலகப் போரில் காயமுற்ற, ஊனமடைந்த படைவீரர்களைச் சந்தித்து ஆறுதலுடன் தன்னம்பிக்கையையும் ஊட்டினார்.
 ஹெலன் கெல்லரின் மனிதகுலத் தொண்டிற்காகவும் "பார்வைத் திறன் காப்பு மற்றும் பார்வை இழந்தோருக்கான சேவை' என்ற திட்டத்தை ஏற்படுத்தியதற்காகவும், லயன்ஸ் மனித நேய விருதினை அந்த அமைப்பு வழங்கிச் சிறப்பித்தது. மற்றும் எண்ணற்ற விருதுகளை அளித்து உலகமே அவரைப் பாராட்டியது.
 அழியாப் புகழ்பெற்ற ஹெலன் கெல்லர் தன்னுடைய 88-ஆம் பிறந்த நாளுக்கு நான்கு வாரங்கள் முன்னதாக 1-6-1968-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
 வாஷிங்டன் கேக்டிரால் தூய சூசையப்பர் ஆலய வளாகத்தில் அவரது நல்லடக்கம் நடைபெற்றது. அப்போது உலகமே கண்ணீர் வடித்தது.
 (அடுத்த இதழில்: லூயிஸ் ப்ரெயில்)

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.