தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூக்கம் உன் கண்களை...

படுத்தவுடன் ஐந்து நிமிஷங்களில் உறங்கவில்லையென்றால் ஒருவருக்கு உறக்கம் குறைவாக உள்ள உடல் உபாதை

News image
Updated On :30 மார்ச் 2013, 7:56 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

படுத்தவுடன் ஐந்து நிமிஷங்களில் உறங்கவில்லையென்றால் ஒருவருக்கு உறக்கம் குறைவாக உள்ள உடல் உபாதை இருப்பதாக அர்த்தம். படுத்த 10 முதல் 15 நிமிஷங்களில் உறங்கிவிடுவது இயல்பான நிலை.

ஒரு குழந்தை பிறந்த முதல் ஆண்டில் அதன் பெற்றோருக்கு 400 முதல் 750 மணி நேரம் வரை உறக்கத்தைக் குறைக்கிறது.

உறக்க நிலையில் மனிதரைப் போல மற்ற உயிரினங்களும் கனவு காண்கின்றனவா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒழுங்காக உறங்க வேண்டுமானால் உடலில் சற்றே சூடு தணிய வேண்டும். நாம் விழித்திருக்கும் நிலைக்கும் நமது உறக்க நிலைக்கும் நமது உடல் உஷ்ணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கோடை காலத்தில் இரவில் சூடு அதிகமாக இருந்தால் சரியான உறக்கம் கிடைப்பதில்லை.

குழந்தைகளுக்கும் டீன்-ஏஜ் எனும் 13 முதல் 19 வயதுஉடையவர்களுக்கும் 10 மணி நேர உறக்கம் அவசியம். 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 6 மணி நேரத் தூக்கம் தேவை. இடைப்பட்ட வயதுடையவர்களுக்கு சுமார் 8 மணி நேர உறக்கம் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.