தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத் திறனாளிகள்... மகத்தான சாதனைகள்!

ஊனமுற்றவர்களை விமானத்தில் பறக்க வைத்ததோடு அவர்களை விமானிகளாகவும் பணியில் அமர்த்தி விந்தை புரிந்தவர் ரிக் ஆம்பெர்.

News image
Updated On :31 மே 2013, 8:54 am

செவல்குளம் ஆச்சா

14 விமானி ரிக் ஆம்பெர்
 

ஊனமுற்றவர்களை விமானத்தில் பறக்க வைத்ததோடு அவர்களை விமானிகளாகவும் பணியில் அமர்த்தி விந்தை புரிந்தவர் ரிக் ஆம்பெர். அந்த நோக்கத்துடனேயே அமெரிக்காவில் "சேலன்ஜ் ஏர்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர்.
 இந்த நிறுவனத்தின் நோக்கம் - உடல் ஊனமுற்றவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, ஊனமுற்ற விமானிகளுக்கு ஓட்ட வாய்ப்பளிப்பது ஆகியவை. ஆதாய நோக்கமில்லாமல் சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம்.
 இத்தகைய நோக்கத்துடன் ரிக் ஆம்பெர் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவை அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான்.
 1967-1971 காலகட்டங்களில் ரிக் ஆம்பெர், அமெரிக்க கடற்படையில் விமான ஓட்டியாகவும் பயிற்சியாளராகவும் இருந்தார். வியத்நாம் யுத்தம் நடந்தபோது, போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட போர் விமானம், குண்டுகளைப் பொழிந்துவிட்டுக் கப்பலுக்குத் திரும்பியபோது ஒரு விபத்து ஏற்பட்டு அதன் விளைவாக, தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தமுடியாத ஊனம் ரிக் ஆம்பெர் அவர்களுக்கு ஏற்பட்டது.
 ஆம்பெர் ஏற்கெனவே அமெரிக்காவின் நேவல் அகடமியில் விஞ்ஞானத் துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பட்ட மேற்படிப்பைப் படித்துப் பட்டம் பெற்றார். வேறுசில பட்டங்களும் பெற்றார்.
 முதலில் கணிதம், அறிவியல் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்த அவரை 1993-ஆம் ஆண்டு, விமானப் பயிற்சி பெறுபவர்களுக்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கும்படி கூறினார்கள். அப்பொழுதுதான் அவருக்கு மறுபடியும் விமான ஓட்டியாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான சான்றிதழைப் பெற, தேவையான விமானப் பயிற்சி நேரத்திற்குப் பதிலாக, பயிற்சி பெறுபவர்களுக்கு மாலை நேரங்களில் பாடம் நடத்தி சரி செய்து கொண்டார்.
 ஓராண்டு காலத்திற்கு உள்ளாகவே அவருக்கு மீண்டும் விமானம் ஓட்ட லைசென்சும், விமான ஓட்டிகளுக்குப் பயிற்சி தரும் பயிற்சியாளராக இருப்பதற்கான லைசென்சும் வழங்கப்பட்டது. அதன்பிறகு பல விமானங்களை ஓட்டி, ஆறுமாதத்திற்கு ஒருமுறை தனது விமானம் ஓட்டும் திறமைக்கு சான்றும் பெற்றுக் கொண்டார்.
 விமான ஓட்டியான அவர் சிறந்த விளையாட்டு வீரரும் கூட டென்னிஸ் விளையாட்டில் தேசிய அளவில் சாம்பியனாகவும் திகழ்ந்தார்.
 1993-ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றவர்களுக்கான சக்கர நாற்காலியில் டென்னிஸ் விளையாட்டுக்கான பயிற்சியைத் தந்து கொண்டிருந்தபோது, ஏதோ காரணங்களால் கால்கள் இழந்த - கால்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்தபோது அவருக்குத் தன்னுடைய விமானப் பயிற்சியும் நினைவிற்கு வந்தது.
 தரையிலேயே நடக்கமுடியாத இந்தக் குழந்தைகளை வானத்தில் பறக்கவைத்து, அதன் காட்சிகளைக் காணவைத்தால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்று எண்ணிப் பார்த்தார். அதன்விளைவாக ஒருநாள் உடல் ஊனமுற்ற சில குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் டல்லஸ் நகரத்தில் இருந்த அடிசன் விமான நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களை விமானத்தில் ஏற்றிப் பறக்கச் செய்த போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கேட்டு அதனால் அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் கண்டு ரிக் ஆம்பெர் பூரித்துப் போனார்.
 அதன் விளைவாக அவர் மனதில் எழுந்ததுதான் "சேலன்ஜ் ஏர்' நிறுவனம். அதன்மூலமாக ஒரு சிறிய விமானத்தை வாங்கி ஊனமுற்றவர்களின் தேவைக்கேற்றபடி அதனை மாற்றி அமைத்தார். நான்கு பேர்கள் அமர்ந்து செல்லும் விமானம், அதில் ஏற, இறங்க, அகலமான கதவுகள், மேலே பிடித்துக் கொள்ள கைப்பிடிகள், அகலமான ஜன்னல்கள், தேவைப்பட்ட உயரத்திற்கு உட்காரத் தேவையான சிறிய தலையணைகள் எனப் பல வசதிகள் அந்த விமானத்தில் இருந்தன. தனது விமானத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு 3500 குழந்தைகளுக்கும் மேலாக அழைத்துச் சென்றுள்ளார்.
 இந்த நிறுவனம் இலாப நோக்கம் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது என்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. அந்தச் சேவையை மட்டுமல்லாது ஊனமுற்றவர்களின் நல்வாழ்வுக்காகவும் உதவி புரியும் பல சமூக சேவை நிறுவனங்களில் ஆலோசகராகவும் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடவைக்கும் சங்கங்களின் உறுப்பினராகவும் சேவை புரிந்தார். 3.5.1997-இல் அந்த சேவைச் செம்மல் காலமானார்.
 ஊனமுற்றவர் என்ற நிலையிலும் சாதனைகள், சேவைகள் புரிந்து "ஊனமுற்றவர்களுக்கு வானமே எல்லை இல்லை' என்பதை மெய்ப்பித்த ரிக் ஆம்பெர் அழியாப் புகழில் என்றென்றும் வாழ்கிறார்.
 அடுத்த இதழில்
 நீச்சல் வீரர் டெரன்ஸ் பார்கின்

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.