செப்டம்பர் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்
4, 1825 - தாதாபாய் நௌரோஜி - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்.
5, 1872 - வ.உ.சிதம்பரம் பிள்ளை - சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன்.
5, 1888 - டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் - முன்னாள் குடியரசுத் தலைவர்.
9, 1899 - கல்கி கிருஷ்ணமூர்த்தி, பிரபல தமிழ் எழுத்தாளர்.
9, 1828 - லியோ டால்ஸ்டாய் - ரஷிய எழுத்தாளர்.
10, 1887 - பண்டிட் கோவிந்த் வல்லபபந்த், சுதந்திரப் போராட்ட வீரர்.
11, 1895 - ஆச்சார்ய வினோபா பாவே - சர்வோதய இயக்கத்தின் நிறுவனர்.
12, 1912 - பெரோஸ் காந்தி - இந்திரா காந்தியின் கணவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
13, 1969 - ஷேன் வார்னே, கிரிக்கெட் வீரர்(ஆஸ்திரேலியா).
13, 1989 - தாமஸ் முல்லர் - கால்பந்து விளையாட்டு வீரர் (ஜெர்மனி).
15, 1860 - விஸ்வேஸ்வரய்யா - மேட்டூர் அணை வரக் காரணமான பத்மஸ்ரீ விருது பெற்ற பொறியாளர்.
15, 1909 - அண்ணாதுரை - தமிழக முன்னாள் முதல்வர்.
16, 1922 - கி. ராஜநாராயணன் - எழுத்தாளர்.
16, 1945 - ப.சிதம்பரம் - முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.
17, 1709 - சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதி உருவாக்கியவர்.
17, 1950 - நரேந்திர மோடி - இன்றைய பாரதப் பிரதமர்.
17, 1879 - தந்தை பெரியார்.
19, 1965 - சுனிதா வில்லியம்ஸ் - விண்வெளி வீராங்கனை.
21, 1921 - சரோஜினி வரதப்பன் - பத்மஸ்ரீ விருது பெற்ற சமூகசேவகி.
22, 1791 - மைக்கேல் ஃபாரடே - டைனமோ கண்டுபிடித்த விஞ்ஞானி.
22, 1869 - வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - எழுத்தாளர், தமிழ் அறிஞர்.
24, 1861 - மேடம் காமா - இந்திய தேசியக் கொடியை முதல்முதலில் ஏற்றிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
24, 1936 - சிவந்தி ஆதித்தன் - தினத்தந்தி குழும இயக்குநர்.
25, 1952 - கிறிஸ்டோபர் ரீவ் - அமெரிக்கர், சூப்பர்மேனாக நடித்தவர்.
25, 1725 - ராபர்ட் க்ளைவ் - இந்தியாவில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியர்.
26, 1899 - உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்.
26, 1932 - டாக்டர் மன்மோகன் சிங் - இந்தியாவின் முன்னாள் பிரதமர்.
26, 1981 - செரீனா வில்லியம்ஸ் - அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை.
27, 1905 - சி.பா.ஆதித்தனார் - தினத்தந்தி குழும நிறுவனர் - முன்னாள் தமிழக அமைச்சர்.
27, 1933 - நாகேஷ் - நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்.
28, 1907 - பகத்சிங் - சுதந்திரப் போராட்ட வீரர்.
30, 1931 - எம்.ஏ.எம்.ராமசாமி - கல்வியாளர்.
நினைவு தினங்கள்
2, 2009 - ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி - ஆந்திர முன்னாள் முதல்வர்.
2, 1969 - ஹோ சி மின் - வியட்நாம் தலைவர்.
5, 1997 - அன்னை தெரஸô.
9, 1976 - மா செ துங் - சீனத் தலைவர்.
8, 2008 - குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் இசைக் கலைஞர்.
9, 2012 - வர்கீஸ் குரியன் - வெண்மைப் புரட்சியின் தந்தை. (அமுல் பால்).
11, 1921 - மகாகவி பாரதியார்.
11, 1948 - ஜின்னா - பாகிஸ்தான் அமையக் காரணமானவர்.
11, 1971 - குருச்சேவ் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.
15, 1950 - மறைமலை அடிகள் - தனித்தமிழ் ஆராய்ச்சியாளர்.
17, 1979 - எம்.ஆர்.ராதா - நடிகவேள் எனப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்.
17, 1953 - திரு.வி.க. - தமிழ்த் தென்றல்.
23, 1939 - சிக்மண்ட் ஃபிராய்ட் - உளவியலின் தந்தை.
24, 1964 - பம்மல் சம்பந்த முதலியார் - எழுத்தாளர், நாடக நடிகர்.
27, 1833 - ராஜா ராம் மோகன்ராய் - "சதி' வழக்கத்தை ஒழித்த சீர்திருத்தவாதி.
29, 1913 - ருடால்ப் டீசல் - டீசல் என்ஜினை உருவாக்கியவர்.
செப்டம்பரில் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
1 லிபியா
2 வியத்நாம்
3 கத்தார்
7 பிரேசில்
9 பல்கேரியா
15 எல்சால்வடார்,
கௌதமாலா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ்,
நிகரகுவா.
16 மெக்ஸிகோ,
பப்புவா நியூ கினியா
18 சிலி
21 மால்டா
22 மாலி
23 சௌதி அரேபியா
26 யேமன்
30 போஸ்வானா
முக்கிய நிகழ்வுகள்
1, 1875 தமிழ்நாட்டில் முதன்முதலாக
மதுரையிலிருந்து திருச்சி வரை ரயில் ஓடியது.
1, 1916 அன்னிபெசன்ட் அம்மையார் "இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டும்' என்பதனை வலியுறுத்தி "ஹோம் ரூல் இயக்கம்' ஆரம்பித்தார்.
1, 1939 இரண்டாம் உலகப்போர் தொடங்கியது.
1, 1956 இந்தியாவில் பல தனியார் இன்சூரன்ஸ்
கம்பெனிகளை இணைத்து,
இந்திய அரசு "லைப் இன்சூரன்ஸ்
கார்ப்பரேஷன்' ஆக்கியது.
2, 2012 அமெரிக்க விண்கலத்தில் பயணித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் 44 மணி,
2 நிமிடம் நடந்து சாதனை செய்தார்.
4, 1978 அண்ணா பல்கலைக்கழகம் உருவானது.
7, 1970 ரஷ்யாவின் லூனா-15 விண்கலம் நிலவில்
இறங்கியது.
11, 1934 பாரதியாரின் 13-வது நினைவு நாளில்
தினமணி நாளிதழ் துவக்கப்பட்டது.
11, 2001 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தின் மீது விமானத் தாக்குதலில் 2,974 பேர்
மரணம். பலர் காயமடைந்தனர்.
13, 1906 முதன்முதலாக ஐரோப்பாவில் ஆகாய
விமானம் பறந்தது.
15, 1981 தஞ்சைப் பல்கலைக் கழகம்
அமைக்கப்பட்டது.
17, 1988 தென்கொரியாவின், சியோல் நகரில், 24ஆவது ஒலிம்பிக் நடைபெற்றது. 159 நாடுகளுடன், 237 போட்டிகளில் 8,465 பேர் கலந்து
கொண்டனர்.
18, 1968 இந்திய உளவுத்துறை ஷதஅர'
உருவாக்கப்பட்டது.
19, 1945 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில்,
"இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம்' என தீர்மானிக்கப்பட்டது.
22, 1921 மதுரையில் காந்திஜி அரை ஆடை உடுத்தும் மனிதரானார்.
23, 1981 காவிரிப் படுகையில் எண்ணெய் வளம்
கண்டறியப்பட்டது.
24, 1988 தமிழகத்தின் மகாபலிபுரம் கலங்கரை
விளக்கம், நூற்றாண்டு விழா கொண்டாடியது.
25, 1609 கலிலியோ தொலைநோக்கி உருவாக்கி,
வியாழன் கோளின் 4 துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார்.
26, 1816 பாண்டிச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்
வந்தது.
27, 2013 உச்சநீதிமன்றம், தேர்தலில் யாருக்கும்
ஓட்டளிக்க விருப்பமில்லை என்று
வோட்டு இயந்திரத்தில் பதிவு செய்யும்
(சஞசஉ ஞஊ பஏஉ அஆஞயஉ) சஅபஞ முறையைக் கொண்டு வந்தது.
28, 1928 அலெக்சாண்டர் ஃபிளமிங் பென்சிலின்
மருந்தைக் கண்டுபிடித்தார்.
29, 1688 ஙஹக்ழ்ஹள் மாநகராட்சி தொடங்கி
வைக்கப்பட்டது.
29, 1962 இந்தியாவில் முதல் "கோளரங்கம்'
கல்கத்தாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
30, 2003 விக்கி மீடியா தமிழில் தொடங்கியது.
முக்கிய தினங்கள்
1-7 ஊட்டச்சத்து வாரம் (இந்தியா)
2 உலக தேங்காய் தினம்
4 உலக சாக்லேட் தினம்
5 ஆசிரியர் தினம் (இந்தியா)
8 உலக எழுத்தறிவு தினம்
13 உலக முதலுதவி தினம்
15 சர்வதேச ஜனநாயக தினம்
16 சர்வதேச ஓசோன் வாயு தினம்
18 உலக அறிவாளர் தினம்
21 சர்வதேச அமைதி தினம்
26 சர்வதேச கடல்சார் தினம்
27 உலக சுற்றுலா தினம்
28 காது கேளாதோர் தினம்,
ரேபிஸ் விழிப்புணர்வு தினம்
29 உலக இதய தினம்.
தொகுப்பு:
வீ. ராமலிங்கன், சென்னிமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூழமந்தல் விநாயகா் கோயிலில் அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜை

விஜய்யுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அந்த இருவர் யார்?

ஸ்விக்கி 4வது காலாண்டு இழப்பு ரூ. 800 கோடியாக குறைவு!

அஸ்ஸாமின் புதிய பாஜக முதல்வர் யார்? மே 10-ல் தேர்வு!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

