நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலமரம்

ஆல மரமாம் ஆலமரம்அழகாய் வளர்ந்தே நிற்கும் மரம்!

News image
Updated On :9 மே 2014, 2:44 am

புலேந்திரன்

 ஆல மரமாம் ஆலமரம்
 அழகாய் வளர்ந்தே நிற்கும் மரம்!
 சாலை வழியில் நடப்போர்க்குத்
 தங்கும் இடமாய் இருக்கும் மரம்!
 
 சுட்டுப் பொசுக்கிடும் வெய்யிலிலே
 சுகமாய் இருந்திட நிழல்கொடுக்கும்!
 கொட்டும் மழையில் நனையாமல்
 குந்தி இருந்திட குடைபிடிக்கும்!
 
 குருவிகள் உண்ணப் பழம்கொடுக்கும்
 குந்தி உறங்கிட கிளை கொடுக்கும்!
 அரித்தே மண்ணைக் கரைக்காமல்
 ஆற்றுக் கரைக்குப் பலம்கொடுக்கும்!
 
 ஆடுகள் தின்னத் தழைகொடுக்கும்
 அடுப்புச் சுள்ளி அதுகொடுக்கும்!
 ஆடும் ஊஞ்சல் விழுதிருக்கும்
 ஆடிட ஆசை சிறுவருக்கும்!
 
 ஆன்றோர் வாழ்த்துக் கூறுவதும்
 ஆல்போல் தழைக்கணும் என்றேதான்!
 சான்றோர் போற்றிடும் ஆல்போல
 தம்பி, தங்கைகள் வாழணுமே!
 

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.