

எத்தனை நேரம் சிலையாக
எனக்கு முன்னால் அமர்ந்திருப்பாய்?
காலம் போனால் வந்திடுமா?
கருத்தை அழித்தால் நலம் வருமா?
எத்தனை தொடர்கள் பார்க்கின்றாய்
எவ்வகை நன்மை நீ பெற்றாய்?
புத்தனை மாற்றிய போதிமரம்
என்றா என்னை நினைத்துவிட்டாய்?
படிக்கும் நேரம் பாழாக
பலமணி நேரம் வீணாக
நடிப்பைப் பார்த்து துடிக்கின்றாய்
நாளும் கண்ணீர் வடிக்கின்றாய்
விலங்கு பறவை வாழ்க்கையெல்லாம்
விந்தை மிகுந்தவை; பார்த்திடலாம்!
அறவியல் செய்த விந்தை பல
அவற்றைப் பார்த்தால் பல நன்மை!
உயிரைப் போன்றது மணித்துளியே - இதை
உணரா திருந்தால் என்ன பயன்?
பயிரைக் காக்கும் உழவன் போல்
பாங்காய் அதை நீ காத்திடுவாய்!
எத்தனை தேவை உனக்குண்டு - அவை
எப்படி உன்னைத் தேடி வரும்?
சிந்தனை செய்து உயர்ந்து விடு
தினமும் கடமைகள் ஆற்றிவிடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசி கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம்

'ரத்தினக் குவியல்...!'

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

காங்கயத்தில் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

