நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிகள் கூறுவீர்!

இன்சொலால் உலகினை ஈர்க்"கலாம்' என்றீர்!நூல்களால் அறிவினை வளர்க்"கலாம்' என்றீர்!

News image
Updated On :9 ஆகஸ்ட் 2015, 3:43 pm

சுமன்

இன்சொலால் உலகினை ஈர்க்"கலாம்' என்றீர்!

நூல்களால் அறிவினை வளர்க்"கலாம்' என்றீர்!

ஊக்கமோடெல்லோரும் உழைக்"கலாம்' என்றீர்!

உழைப்பினால் வறுமையைப் போக்"கலாம்' என்றீர்!

சீரிய கருத்துக்கள் ஏற்"கலாம்' என்றீர்!

ஏற் றதனைச் செய லாக்"கலாம்' என்றீர்!

விண்கலம் ஏவிப் பார்க்"கலாம்' என்றீர்!

ஏவிச் சாதனை படைக்"கலாம்' என்றீர்!

திருக்குறள் தினமும் படிக்"கலாம்' என்றீர்!-அதன்

போதனை அனைவரும் ஏற்"கலாம்' என்றீர்!-நீர்

சிந்தித்த கருத்துகள் உரைக்"கலாம்' என்றும்

மாணவர் பலரைச்... சந்திக்"கலாம்' என்றும்

ஊர் பல சென்று உரை பல நிகழ்த்தினீர்!

பார் புகழ் சாதனை படைத்திட்டீர்...பாரதத்

தாயின் முதல்குடி மகனாய் ஆனீர்!

அழகிய சிகையுடன் அமைதி! புன்னகை!

காணுவோம் "கனவு'கள் தங்கள் சொற்படி!

பேணுவோம் நாட்டைப் பேணுவோம் என்றும்!

தங்கள் மறைவால் நெஞ்சம் கனத்தது!

அஞசலி செலுத்துவோம் அனைவரும் கூடி!

ஆசிகள் கூறுவீர்! ஆசிகள் கூறுவீர்!

"அப்துல் கலாம்' நீவிர்! ஆசிகள் கூறுவீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.