வியப்பூட்டும் எரிமலைகள்!
இந்தோனேஷியாவில் உள்ள சாம்பாவா (SAMBAWA) தீவில் உள்ளது "டாம்போரா' (TAMBORA) எரிமலை! இதன் தற்போதைய உயரம் 9353அடிகளாகும்!
இந்த எரிமலை 1815ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல நாட்கள் தொடர்ந்து மிக சிறிய அளவிலான சீற்றங்களுடன் காணப்பட்டது! அப்போது இதன் உயரம் 14107 அடிகளாகும்!திடீரென்று ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் மிக பயங்கரமாக வெடித்துச் சிதறியது! இதனை இன்றளவும் புவியியல் வல்லுனர்கள் "எதனுடனும் ஒப்பிடமுடியாத கோரமான எரிமலை வெடிப்பு' என்கின்றனர்!
இந்த எரிமலை வெடிப்பின்போது அடர்த்தியான பாறைக்குழம்புடன்-"மேக்மா'(MEGMA)- சுமார் 400 மில்லியன் டன் அளவிற்கு 700டிகிரி சென்டிகிரேட் வெப்பத்துடன் பல வகையான வாயுக்களும், பெரிய அளவில் புகையும் நீராவியும், பெரும் பாறைகளும் பாறைத்துண்டுகளும் சாம்பலும், தூசும் கலந்து இருந்ததால் எரிமலையின் மேல் பகுதி ஏறக்குறைய 4900அடி உயரத்திற்கு வெடித்துச் சிதறிவிட்டது!!
லாவா(LAVA) என்றழைக்கப்படும் வெளிவந்த எரிமலைக்குழம்புடன் பாறைத்துண்டுகள், மற்றும் எரிமலை வெடித்ததினால் உருவான பாறைத்துண்டுகள், என அந்த பிரதேசம் முழுவதும் சில நூறு சதுர கி.மீ. தூரத்திற்கு பாறைத் துண்டுகளும் துகள்களும் மழை போல் பொழிந்தது!
எரிமலை கக்கிய புகை, தூசு, சாம்பல் மற்றும்
வாயுவும் காற்று மண்டலத்தில் வேகத்துடன் கலந்து 100 கன.கி.மீ அளவிற்கு அடர்ந்த மேகம் போல் சூழ்ந்துவிட்டது!! பல நாட்கள் சூரிய ஒளியே அங்கு தெரியவில்லை! கடலில் சுனாமி பேரலைகள் தோன்றி பல நூறு கி.மீ. தூரத்திற்கு கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன! விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் அழிந்துபோயின. பல கிராமங்கள் சாம்பலினால் புதையுண்டு அழிந்து போயின! சுமார் ஒரு லட்சம் மக்கள் சில நாட்களுக்குள் உயிரிழந்தனர்!
காற்று மண்டலத்தில் கலந்த சாம்பலும் புகையும், தூசும், வாயுக்களும் சுமார் ஒரு வருடகாலம் சூரிய ஒளியை மறைத்திருந்தது! கோடைக்காலமே இல்லாத ஆண்டாக இருந்தது! உலகின் பல பகுதிகளில் இதன் பாதிப்பு தெரிந்தது! மேற்கு ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, மற்றும் வட அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்களில் கூட வெயிலே இல்லாமல் உறைபனி அல்லது கடும்பனியினால் பாதிக்கப்பட்டது! இதனால் தாவரங்கள் அழிந்து கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது!
ஏராளமான மக்கள் புலம் பெயர்ந்தனர்!
தந்தி கண்டுபிடிக்கப்படாத காலம் என்பதால் பலருக்கும் இந்த பாதிப்பிற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை! எரிமலை வெடித்தது ஆசியா கண்டத்திலேயே பல பகுதிகளில் அறியப்படாமலேயே இருந்தது! சில மாதங்களுக்குப் பிறகே ஐரோப்பாவை இந்தச் செய்தி சென்றடைந்தது!
1850இல் இந்த எரிமலை வெடிப்பினை பற்றிய பல தகவல்களை ஆராய்ந்து எழுதிய பிரிட்டனை சேர்ந்த புவியியல் வல்லுநர் ஒருவர், இந்த டாம்போரா எரிமலை வெடித்த சப்தம் 500கி.மீ தூரத்தில் இருந்த சுமத்திரா தீவு வரை கேட்டதாகவும், மக்கள் அதனை பீரங்கிக் குண்டுகள் வெடித்துவிட்டதாக கருதியதாகவும் அக்கால கட்டத்தில் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த ஜாவா தீவின் கவர்னராக பணியாற்றிய சர்.ஸ்டாம் போர்ட் ராப்பில்ஸ் என்பவரை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்!
2004ஆம் ஆண்டு இப்பகுதியினை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் எரிமலையின் அடிவாரத்தில் 3 மீட்டர் ஆழத்தில் சாம்பலில் புதைந்து கிடந்த பழைய கிராமங்களையும், உடைந்த பொருட்களையும் கண்டுள்ளனர்! 1967ஆம் ஆண்டு இந்த எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்திற்குப் பின் இந்த எரிமலை அமைதியாக உள்ளது! இந்த ஆண்டில் ஏப்ரல் 10ஆம் தேதி மாபெரும் எரிமலை சீற்றத்தின் 200ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது!
கிலாவியா எரிமலை!
(KILAUEA VOLCANO - HAWALI ISLANDS - US)
தற்போது உலகில் சுமார் 1500 எரிமலைகள் செயல்திறனோடு உள்ளது! இவற்றில் மிகச் சிறந்த செயல்திறனுடைய எரிமலை கிலாவியா எரிமலை ஆகும். ஹவாலி தீவில் உள்ளது. அத்தீவிலுள்ள ஐந்து எரிமலைகளில் இதுவும் ஒன்று! இந்த எரிமலையின் லாவா தென்பகுதியில் உள்ள கடலுக்குள் 16 கி.மீ தூரம் பெருக்கெடுத்து ஓடியது! கடற்பரப்பில் 10400 சதுர கி.மீ அளவிற்கு புதிய நிலப்பகுதி உருவாகியது!
பர்ரிகுடின் எரிமலை!
மெக்ஸிகோ நாட்டின் மக்காச் சோள விளை நிலத்தில் 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி சிறியதாக புகை வரத்தொடங்கியது! பின் அதன் வழியாக பலமுறை லாவா பெருகி வந்தது! ஒரே ஆண்டில் 1476 அடி உயரமுள்ள எரிமலை தோன்றியது! 1952ஆம் ஆண்டிற்குள் 9212 அடி உயரம் வளர்ந்து விட்டது! பிறகு இதன் சீற்றம் இன்று வரை இல்லை!
எரிமலைகள் - சில அடிப்படைத் தகவல்கள்!
"மேக்மா' என்பது பாறைக் குழம்பு! வெளியே வந்தவுடன் "மேக்மா' என்பது "லாவா' என்று அழைக்கப்படும்! லாவா ஆறியவுடன் பாறைகளாக இறுகிவிடும்! இதனால் ஏற்படும் புதிய நிலப்பகுதியே "எரிமலை' எனப்படுகிறது!
கடலுக்கடியில் உள்ள தரைப்பகுதியிலும் எரிமலைகள் உள்ளன!
சுமார் 1500 எரிமலைகள் தற்போது உயிர்ப்புடன் வெடிக்கும் நிலையில் உள்ளன!
சீற்றமின்றி அமைதியாக உள்ள எரிமலைகள் "தூங்கும் எரிமலைகள்' என்று அழைக்கப்படுகின்றன!
மேக்மா!
பூமியின் மேல் ப்ட்டுக்குக் கீழே உருகிய பாறைகள் கொதிநிலையில் இருக்கும். இது "மேக்மா' எனப்படுகிறது. இதில் மலை போன்ற பெரிய பெரிய பாறைகள் மிகவும் சூடாக திட நிலையில் மிதந்து கொண்டிருக்கும்! இந்தப் பாறைக் குழம்பில் பலவகை உலோகங்களும், நீராவியும், பலவகையான வாயுக்களும் கலந்திருக்கிறது. பூமியின் சுழற்சி வேகத்தினால் மேக்மா குறைந்த அழுத்தத்துடன் நகர்ந்து கொண்டேயிருக்கும்! இந்த மேக்மாவில் அழுத்தம் அதிகமாகும்பொழுது லாவாவாக வெளிவருகிறது. இதன் வெப்பநிலை 700டிகிரி சென்டிகிரேட் முதல் 1700டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும். லாவா கொதிநிலையில் மினுமினுப்பான சிவப்பு, கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
புவித்தட்டுகள்!
நாம் பார்க்கும் பூமியின் மேல் ஓடு புவித்தட்டுகள் எனப்படும். மிகப்பெரிய கடினமான பாறைத்துண்டுகளால் ஆனது 12 பெரிய புவித்தட்டுகள் மற்றும் பல சிறிய புவித்தட்டுகள் இணைந்ததே பூமியின் மேலோடாகும். இதன் மேல் பகுதியே நாம் வசிக்கும் நிலப்பகுதியாகும்!
இந்தப் புவித்தட்டுகள் அனைத்தும் மேக்மா மீது மிதந்து கொண்டிருக்கிறது! மேலும் எப்போது நகர்ந்துகொண்டே இருக்கிறது!
இந்த நகர்தலின்போது புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் மோதுவது, ஒன்றின் விளிம்புப் பகுதியின் கீழ் மற்றொன்றின் விளிம்புப் பகுதி செல்வது, அல்லது விலகிச் செல்வது, போன்ற நிலைகளால் எரிமலை, பூகம்பம், சுனாமி போன்றவைகள் ஏற்படுகின்றன! மேலும் நிலப்பகுதியும் மாற்றத்துக்குள்ளாகிறது!
இந்தியாவில் எரிமலைகள்
அந்தமான் நிகோபார் தீவுகளிலுள்ள "பாரன் தீவு' தவிர இந்தியாவில் வேறெங்கும் எரிமலைகள் இல்லை! இந்தியா "இந்திய - ஆஸ்திரேலிய' புவித்தட்டின் உட்பகுதியில் அமைந்துள்ளது. எனவே எரிமலைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு! இமயமலைப் பகுதியில் "இந்திய - ஆஸ்திரேலிய' புவித்தட்டும் "யுரேசியன்' புவித்தட்டும் இணைகிறது. அதனால்தான் அங்கு நில நடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


