சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தர்மம் வீணாகாது!

ஓர் ஊரில் மிக நல்ல மனிதர் ஒருவர் இருந்தார். ஏராளமான செல்வங்கள் நிறைந்தவரும்கூட! தினமும் யாருக்காவது ஏதாவது கொடுத்து உதவுவார். அதுமட்டுமல்ல...

News image
Updated On :12 டிசம்பர் 2015, 12:02 pm

அ. ராஜா ரகுமான்

ஓர் ஊரில் மிக நல்ல மனிதர் ஒருவர் இருந்தார். ஏராளமான செல்வங்கள் நிறைந்தவரும்கூட! தினமும் யாருக்காவது ஏதாவது கொடுத்து உதவுவார். அதுமட்டுமல்ல...,தான் கொடுப்பது யாருக்கும் தெரியக் கூடாது என்றும் நினைப்பார். எனவே அதை ரகசியமாகத்தான் செய்வார்! ஒரு நாள் சிறிது பணத்துடன் இரவு வெளியில் சென்றார். அங்கு ஒருவனைக் கண்டார். அவன் திடகாத்திரமான உடலுடன் இருந்தாலும் சற்றே சோர்வுற்று இருப்பதைக் கண்டார்! அவனை அருகில் அழைத்து, தன்னிடமிருந்த பணத்தை அவனிடம் கொடுத்தார்! அவனும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்!

 யாருக்கும் தெரியாமல் தருமம் செய்ததில் அவருக்கு மகிழ்ச்சி!

 ஆனால் அவனோ திருடன்! மறுநாள் அந்தத் திருடன் தனக்குப் பணம் கிடைத்த விஷயத்தை சிலரிடம் கூறினான். அந்தச் செய்தி பரவி விட்டது. போயும் போயும் யாரோ ஒரு மடையன் இந்த திருடனுக்கு உதவி இருக்கிறானே என்று எல்லோரும் பேசிக் கொண்டனர். அது செல்வந்தர் காதிற்கும் எட்டியது.

 "அடடா...ஒரு திருடனுக்கா உதவி செய்துவிட்டோம்! நம்ம தருமம் பிரயோஜனமில்லாம போச்சே!' என்று நினைத்துக் கொண்டார்.

 மறுநாள் இரவும் அவர் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார். அங்கு சற்று குண்டான மனிதனைக் கண்டார்! அவனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தருமம் செய்ததில் அவருக்கு ரொம்ப திருப்தி!

 இந்த முறை பணம் பெற்றுக் கொண்டவன் ஒரு செல்வந்தன்! அவன் சரியான கஞ்சன்! இந்த விஷயமும் ஊர் முழுக்கத் தெரிந்து விட்டது! ஊரிலிலுள்ளோர், "யாரோ ஒரு முட்டாள் இந்தக் கஞ்சனுக்குப் பணம் தந்து விட்டுப் போயிருக்கிறான்...மூளையில்லாதவன்''என்று பலவாறாகப் பேசிக் கொள்வதை அறிந்தார் அந்த நல்ல மனிதர்!

 தினமும் இப்படி ஆகிவிடுகிறதே! என்று படுத்துத் தூங்கினார் அவர். கனவில் இறைவன் தோனறி, ""நீ செய்த தருமம் வீண் போகவில்லை!....கவலைப்படாதே! அந்தத் திருடன் திருந்தி விட்டான்...இப்போது உழைத்து வாழ்கிறான். அது மட்டுமல்ல! அந்தக் கஞ்சனும் தான தருமங்கள் செய்ய ஆரம்பித்து விட்டான். உன் தருமம் வீண் போகவில்லை!'' என்று கூறி மறைந்தார்.

மறுநாள் இரவு, ""ஓரு நல்ல சூழ்நிலையில்தான் தன் பணம் அவர்களுக்குப் பயன்பட்டிருக்க வேண்டும்! அதுவும் இறைவன் அருளால்!'' என்று நினைத்தவாறு சிறிது பணத்துடன் அவர் அந்த இருளில் வெளியில் சென்றார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.