பொன்மொழிகள்
சிக்கனமாக இல்லாதவன் சாமர்த்தியசாலியாக இருக்க முடியாது. சாதுரியமாக குடித்தனம் நடத்த இயலாது.


* சிக்கனமாக இல்லாதவன் சாமர்த்தியசாலியாக இருக்க முடியாது. சாதுரியமாக குடித்தனம் நடத்த இயலாது.
-பேகன்ஸ் பீல்டு
* அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாய்ச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அதுபோல்தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.
-கதே
* அதிகச் செலவும் முட்டாள்தனமான சிக்கனமும் தீமையே விளைவிக்கும்.
-ஹென்றிபோர்டு
* சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூட வறியவர் ஆகார்.
-ஜான்ஸன்
* செல்வாக்கு நீடித்திருக்க வேண்டுமானால் செல்வத்தைப்போலவே அதையும் சிக்கனமாகவே செலவு செய்ய வேண்டும்.
-டால்ஸ்டாய்
* சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்ததன்று. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதேயாகும்.
-ஆரிசன்ஸ்வெட்
* செலவாளி தன் வாரிசைக் கொள்ளை அடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.
-புரூயர்
* சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றியும் கவனமாய் இரு. அடித்தளத்திலுள்ள சிறு ஓட்டை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்து விடலாம்.
-பிராங்ளின்
* ஒரு தேசபக்தனை அவனுடைய தேசத்திலிருந்து விரட்டி விடலாம். ஆனால் அவன் உள்ளத்திலிருந்து அவனுடைய தேசபக்தியை விரட்ட முடியாது.
-வால்டேர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...