பொன்மொழிகள்
மனிதன் பிறந்தது வெற்றியடையவே. தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.


* மனிதன் பிறந்தது வெற்றியடையவே. தோல்விக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
-ஹென்றி டேவுப்தோரோ
* பிறருக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதைவிட நமது நடத்தையே அவர்களுக்கு முன்மாதிரியாக அமையும்.
-கார்ட்டர்
* அடுத்தவர் இடத்திலிருந்தும் கோணத்திலிருந்தும் நாம் நம்மைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
-எம்ஸ்காட்பெக்
* நாளைக்கு என்று எதையும் ஒத்திப் போடாதே. ஏனெனில் இன்று அச்செயல் உனக்கு மகிழ்ச்சி அளிப்பதால் நாளையும் அதனைச் செய்வாய்.
-ஜேம்ஸ்மைச்ரர்
* மற்றவர்களுக்குச் சொல்லிவரும் அதே அறிவுரைகளைக் கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைக் கண்டு வருகிறார்கள்.
-கியூபெர்ட்கிரீன்
* பெரிய மனிதனாக ஆவதற்கு நிறைய நற்குணங்களை மட்டும் கொண்டிருந்தால் போதாது. அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.
-லாரோச்பெனகாட்ல்டு
* வாழ்க்கை இன்பமானதும் அன்று துன்பமானதும் அன்று. தைரியத்தோடும் தியாக உணர்வோடும் ஈடுபட வேண்டிய ஒரு கடினமான தொழில்.
-டி-டாக்குவெல்லி
* உயிரோடு உள்ளபோது தம் இதயத்தை இன்ப உலகிற்கு அனுப்பாதவன் உயிர் போன பின் இன்ப உலகிற்குப் போக முடியாது.
-பிஷப்ஷல்சன்
* நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் ஒவ்வொரு கட்டுப்பாடும் நம்மைச் சுதந்திர மனிதனாக மாற்றுகின்றன.
-ஜே.பி.டபிள்யூ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...