

இந்த மதம்நான் அந்த மதம்நீ
என்பது எல்லாம் வீண் பேச்சு!
எந்த மதம்நீ என்றிருந் தாலும்
இறைவன் வழியில் வாழ்ந் திடுவாய்!
இறைவன் வழியில் வாழ்வது என்றால்
எங்கோ இல்லை அவ் வாழ்வு
இறைவன் உனக்குள் இருப்பத னால்நீ
எண்ணிடும் வாழ்வே உன் வாழ்வாம்!
எண்ணம் நலமாய் இருந்தால் வாழ்வு
இனிதாய் அமையும்; அது அன்றி
எண்ணக் கெடுதல் இருந்தால் வாழ்வில்
என்றும் அல்லல் தான் அறிவாய்!
எனவே தூய எண்ணம் கொண்டால்
இனிதாய் அமையும் உன் வாழ்வு!
இனிதாய் வாழ்வு இருந்தே விட்டால்
எந்த மதம்நீ என்பது வீண்!
மதத்தில் பேதம் என்பது எல்லாம்
மனத்தின் பேதம் தான்; எனவே
மனத்தில் தூய எண்ணம் கொண்டே
மேலாம் வாழ்வைப் பெறுவாயே..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.