சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சரியான பதில்!

அக்பர் பாதுஷாவும் பீர்பாலும் உலாவச் செல்வது வழக்கம்! அக்பரின் மகன் இவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டு தானும் வருவதாக வீம்பு பிடித்து ஆர்பாட்டம் செய்தான். மகனை சமாதானப் படுத்த

News image
Updated On :19 டிசம்பர் 2015, 11:06 am

அ. ராஜா ரகுமான்

அக்பர் பாதுஷாவும் பீர்பாலும் உலாவச் செல்வது வழக்கம்! அக்பரின் மகன் இவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டு தானும் வருவதாக வீம்பு பிடித்து ஆர்பாட்டம் செய்தான். மகனை சமாதானப் படுத்த முடியாமல் வேறு வழியின்றி அவனையும் தன்னுடம் அழைத்துச் சென்றார் அக்பர்.

 அது நல்ல கோடைக்காலம். காற்றும் வரவில்லை. ஒரு மரம் கூட அசையவில்லை. மிகவும் புழுங்க ஆரம்பித்தது. அரச குடும்பத்தின் ஆடையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? மேலே அணியப்படும் அங்கி உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டு இருக்கும்! காற்று புகா வண்ணம் அலங்காரங்களுடன் தைக்கப்பட்டிருக்கும்!

 அக்பருக்கு வியர்த்துக் கொட்டியது! மிகவும் சங்கடமாக இருந்தது.

 மன்னர் தன் மேலங்கியைக் கழற்றி பீர்பாலிடம் கொடுத்து விட்டார். தலைப்பாகை உட்பட! தந்தையின் இச்செயலைக் கவனித்துக்கொண்டிருந்த இளவரசனும் தன் மேலங்கியைக் கழற்றி பீர்பாலிடம் கொடுத்து விட்டான்.

 என்ன செய்வது? அரசராயிற்றே! வேறுவழியின்றி அவற்றைச் சுமந்து கொண்டு வந்தார் பீர்பால்! அக்பர் பீர்பாலை நையாண்டி செய்ய நினைத்தார். அவர் பீர்பாலிடம், ""என்ன பீர்பால்! ஒரு கழுதை பொதி சுமப்பது போல் உணர்கிறாயா?'' என்று கேட்டார்.

 பீர்பாலுக்கு சற்று அவமானமாகப் போய்விட்டது! "ஆடைகளைத் தன்னிடம் கொடுத்தது மட்டுமின்றி இப்படிக் கிண்டல் செய்கிறாரே அரசர்' என்று நினைத்துக் கொண்டார். அரசருக்கு சரியான பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்தார்.

 பீர்பால் அரசரிடம், ""அரசே! இது ஒரு கழுதை பொதி சுமப்பது போல் இல்லை...! இரண்டு கழுதைகளின் பொதிகளைப் போலல்லவா இருக்கிறது!''

 பீர்பாலின் பதிலுள்ள நகைச்சுவையை ரசித்த அக்பர் சிரித்துக்கொண்டே தன் மேலங்கியை வாங்கிக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.