சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திறமை இருக்கு உம்மிடம்!

குருவி கூடு கட்டுது!கூடு கட்ட யாரிடம்குருவி கற்றுக் கொண்டது?கூறு தம்பி தங்கையே!

News image
Updated On :4 ஜூலை 2015, 5:08 am

குருவி கூடு கட்டுது!

கூடு கட்ட யாரிடம்

குருவி கற்றுக் கொண்டது?

கூறு தம்பி தங்கையே!

எறும்பு உணவைச் சேர்க்குது

எங்கும் ஓடி உழைக்குது!

சுறுசுறுப்பாய் உழைத்திட

சொல்லு எங்கே கற்றது?

கொக்கு கரையில் நிற்குது

குறியாய் மீனைக் கொத்துது!

கொக்கு கல்வி கற்றதா?

குறியாய் மீனைக் கொத்தவே.

மலரும் பூத்துச் சிரிக்குது

மதுவைச் சுரந்து கொடுக்குது!

மலரும் பாடம் படித்ததா?

மதுவைச் சுரந்து கொடுக்கவே.

தேனீ தேனைத் தேடுது

தேடிச் சேர்த்து வைக்குது!

தேனீ கற்றதெவ்விடம்?

தேனைத் தேடும் ஆற்றலை.

காக்கை ஒன்றாய் வாழுது

கரைந்தே கூடி உண்ணுது!

காக்கை பள்ளி போனதா?

கரைந்து கூடி உண்ணவே.

திறமை இருக்கு உம்மிடம்

தேடு அந்தப் புதையலை

திறமை காட்டு உலகினில்

தேடும் உலகம் உம்மையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.