

1.இவனுடைய நிறம் நீலம். இவனது எல்லை நெடுந்தூரம்... இவன் யார்?
2.ஓர் எழுத்து... எழுத உதவும்... இது என்ன?
3.என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன்.... நான் யார்?
4.காட்டில் கிடைத்த கட்டை கான மழை பொழிகிறது... இது என்ன?
5.விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது... இது என்ன?
6.கருப்புக் காகம் ஓடிப் போச்சு... வெள்ளைக் காகம் நிக்குது... இது என்ன?
7.கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப்பெற்று மகிழ்ந்தான்... இவன் யார்?
8.கலர் பூ கொண்டைக்காரி, காலையிலே எழுப்பி விடுவாள்... இவள் யார்?
9.அகன்ற வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன்...இவன் யார்?
விடைகள்:
1. கடல்
2. கை
3. கண்ணாடி
4. புல்லாங்குழல்
5. தஞ்சாவூர் பொம்மை
6. உளுந்து
7. சோளக்கதிர்
8. சேவல்
9. அண்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.