
Updated On :23 மே 2015, 9:21 am

பறவைக் காட்டில் பள்ளிக் கூட
ஆண்டு விழாவில்
பாக்குச் சிட்டு வந்தோர்க்கெல்லாம்
வணக்கம் சொன்னதாம்!
பறந்து வந்த பாம்பு தாரா
தலைமை ஏற்றதாம்!
பட்டு மைனா தமிழ்த்தாய் வாழ்த்து
பாடிச் சென்றதாம்!
சின்னக் கிளியில் சந்தத் தமிழில்
சிறப்பாய் பேசியதாம்!
கன்னல் குரலில் காட்டுக் குயிலும்
கானம் பாடியதாம்!
வண்ணத்தோகை விரித்தே மயிலும்
நடனம் ஆடியதாம்!
விழாவை முடித்து செங்கால் நாரை
நன்றி கூறியதாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...