ஜெர்மனியில் ஒரு சிற்பக் கூடத்திற்கு சென்ற பார்வையாளர், சிலை செதுக்கும் சிற்பியின் திறமை கண்டு வியந்து பாராட்டினார். அப்போது பக்கத்தில் இருந்த சிலை ஒன்றையும் கவனித்தார்! சிற்பி செதுக்கிக் கொண்டிருப்பதும், பக்கத்தில் உள்ள சிலையும் ஒன்றாகவே இருந்தது!
பார்வையாளர் சிற்பியிடம்,""ஏற்கெனவே இதுபோல ஒரு சிலை உள்ளதே எதற்கு அதுபோல இன்னொரு சிலை செதுக்குகிறீர்கள்?'' என்றார்.
அதற்கு சிற்பி,""ஏற்கெனவே செதுக்கி வைத்துள்ள சிலையில் குறை உள்ளது'' என்றார்.
""அப்படியா?'' என்று வியந்த பார்வையாளர், குறையுள்ள சிலையை கூர்மையாகப் பார்த்தார். அவர் கண்களுக்கு எந்தக் குறையும் தென்படவில்லை! சிற்பியிடம்,""இதில் குறை ஏதும் இல்லையே!'' என்றார். அதற்கு சிற்பி, ""சிலையின் வலது கன்னத்தில் ஒரு சிறிய மெல்லியக் கோடு இருக்கும் பாருங்கள்.'' என்றார். சிலையின் அருகில் சென்று உற்றுப் பார்த்தபோதுதான் அந்தக் கோடு தெரிந்தது.
""அது சரி, இச்சிலையை எங்கு வைக்கப் போகிறீர்கள்?'' என்று பார்வையாளர் கேட்டார்.
""20 அடி உயரப் பீடத்தின் மேல் இச்சிலையை நிறுவ உள்ளோம்''என்றார் சிற்பி.
அதற்கு பார்வையாளர் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே,""நீங்கள் அநாவசியமாக இன்னொரு சிலை வடிக்கிறீர்கள்...,20 அடி உயரத்தில் இருக்கும் சிலையின் முகத்தில் உள்ள மெல்லிய கோடு கீழிருந்து பார்ப்பவருக்கு தெரியப்போவது இல்லை.'' என்றார்.
அதற்கு சிற்பி, ""எனக்குத் தெரியும்....., மற்றும் பிறருக்காக வேலை செய்வதைவிடவும் ஆத்ம திருப்திக்காக வேலை செய்வது நல்லது அல்லவா?'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


