நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"ரூபிக்ஸ் க்யூப்' சாம்பியன்!

ஆறு பக்கங்கள், ஆறு வண்ணங்கள் கொண்ட கனசதுரம்! இதைக் கலைத்துப் போடுவது...,பின் ஒவ்வொரு பக்கமும் ஒரே வண்ணம் வருமாறு பொருத்துவது இதுதான்

News image
Updated On :21 நவம்பர் 2015, 10:20 am

சுமன்

ஆறு பக்கங்கள், ஆறு வண்ணங்கள் கொண்ட கனசதுரம்! இதைக் கலைத்துப் போடுவது...,பின் ஒவ்வொரு பக்கமும் ஒரே வண்ணம் வருமாறு பொருத்துவது இதுதான் "ரூபிக்ஸ் க்யூப்' விளையாட்டு என்பது அனேகமாக எல்லோருக்கும் தெரியும்!

ஆர்வமிகுதியால் ஒருமுறை கடையில் நான் ரூபிக்ஸ் க்யூப் வாங்கிவந்து கலைத்துவிட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.....பக்கத்து வீட்டு அங்கிள் வேறு நான் திணறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்....., ம்ஹூம், ஒரு பக்கம் கூட என்னால் பொருத்த முடியவில்லை! என்னைப் பார்த்து அங்கிள் கிண்டலாக சிரித்துக் கொண்டிருந்தார்!

நான் வேணும்னா ட்ரை பண்ணட்டுமா''என்று அவர் கேட்க, க்யூபை அவரிடம் கொடுத்துவிட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்!

அங்கிள் சுமார் அரை மணிநேரம் போராடி வியர்த்து ஒருவழியாக ஒரு பக்கம் சிவப்புக் கலரைக் கொண்டுவந்தார்!

""இன்னும் ஐந்து பக்கங்கள்?''..., என்று நான் கேட்டு சுமார் இரண்டு மாதங்களாகிறது. இதுவரை அதைப்பற்றி அவர் பேசுவதே இல்லை!(முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்!) நானும் அதைப்பற்றி அவரிடம் கேட்பதும் இல்லை! பாவம்! அந்த அங்கிளை விட்டுடலாம்!

இது இவ்வாறு இருக்க, பெரம்பூரிலுள்ள கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் நிறைநிலை மேனிலைப் பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் மாணவி ஷ்ரதா!

ஷ்ரதாவின் தந்தை அசோக் மென்பொருள் துறையில் பணியாற்றுவது மட்டுமின்றி "ரூபிக்ஸ் க்யூப்' விளையாட்டிலும் ஆர்வமாகத் திகழ்கிறார்! தன் மகளை இந்த விளையாட்டில் வீராங்கனையாக ஆக்குவது தனது லட்சியம் என்கிறார்! ரூபிக்ஸ் க்யூபில் எளிய நகர்வுகளைக் கற்றுத் தரும்போது வெகுவிரைவில் புரிந்துகொள்கிறாராம் ஷ்ரதா!

வார இறுதி நாட்களை தன் மகளுடன் க்யூப் விளையாட்டில் செலவழிக்கிறார் அசோக்!

சில நாட்களிலே தனியாக விளையாட ஆரம்பித்து விட்டாளாம் ஷ்ரதா! ஒரு நாள் மகிழ்ச்சி பொங்க அவள் தனியாக ஆறு பக்கங்களையும் பொருத்திக் காண்பித்தாள்! அசோக்கிற்கு ஆச்சரியமாகப் போய்விட்டது! மறுபடியும் வண்ணங்களைக் கலைத்து அவளிடம் கொடுக்க, பதினைந்து நிமிடங்களில் மறுபடியும் பொருத்திக் காண்பித்து விட்டாளாம்!

அவளது திறமையை அறிந்த பள்ளி நிர்வாகிகள் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் அவளது "ரூபிக்ஸ் க்யூப்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தினர். 600 பேர் கொண்ட அரங்கு!

அதில்...., மேடைபயமின்றி (இளங்கன்று!) தன் பிஞ்சு விரல்களால் ஆறு பக்கத்தையும் சுமார் நான்கு நிமிடங்களில் பொருத்தி விடுகிறார்! பள்ளியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிய ஆச்சரியம்! (இருக்காதா பின்னே!)

ஏனையோருக்கும் பெருமையும் ஆச்சரியமும் தாங்கமுடியவில்லை!

Story image

மேடையில் ஷ்ரதாவைப் பற்றி அவரது தலைமை ஆசிரியர், ""அவள் அமைதியான, கூரிய கவனத்துடன் திகழ்பவள்'' என்று பெருமையுடன் கூறுகிறார். 

ஷ்ரதாவின் தாயார் "நீத்து அசோக்' கூறும்போது, ""மற்ற விளையாட்டுப் பொருள்களுடன் ஒன்றாகத்தான் இந்த ரூபிக்ஸ் க்யூப் விளையாட்டையும் விளையாடத் தொடங்கினாள்...,அதில் இவ்வளவு தேர்ச்சி பெறுவாள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது...,இது ஆச்சரியம்தான்'' என்கிறார்.

பள்ளித் தாளாளர், ""4 வயது ஆன ஷ்ரதா வெகுவிரைவில் உலக சாதனையாளராகத் திகழ்வார்'' என்று ஆர்வமாகக் கூறினார்.

ஷ்ரதாவிடம் அவளது குறிக்கோள்(?) என்ன என்று கேட்டால் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று செல்லமாக சிணுங்குகிறாள்! 

அங்கிள் வீட்டில் என் "ரூபிக்ஸ் க்யூப்' தூங்கிக் கொண்டிருக்கிறது. ஷ்ரதா சொல்லித் தருவாரா?

ஷ்ரதா டாக்டராக வாழ்த்துகள்! சாம்பியனாகவும்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.