
சுயமதிப்பு!
ஒரு பரம ஏழை! அவன் இறைவனிடம் பக்தி கொண்டிருந்தான். ஆனால் அவனது வறுமை நீங்க வில்லை! தனது வறுமையை கடவுள் ஏன் நீக்கவில்லை என்று விரக்தி அடைந்தான்.

ஒரு பரம ஏழை! அவன் இறைவனிடம் பக்தி கொண்டிருந்தான். ஆனால் அவனது வறுமை நீங்க வில்லை! தனது வறுமையை கடவுள் ஏன் நீக்கவில்லை என்று விரக்தி அடைந்தான்.
ஒரு நாள் அவ்வூருக்கு ஒரு துறவி வந்திருந்தார். அவரை சந்தித்த அந்த ஏழை, ""ஐயா நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடவுளிடம் நம்பிக்கையும் பக்தியும் வைத்துள்ளேன். ஆனால் என் வறுமை மட்டும் நீங்கவே இல்லை. என்னை இறைவன் ஏழையாகவே வைத்திருக்கிறான் இது ஏன்?'' என்று கேட்டான்.
துறவி சிரித்தபடி, ""உனக்கு பத்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் உன் இரண்டு கண்களையும் தருவாயா?'' என்று கேட்டார்.
""ஐயய்யோ! லட்ச ரூபாய் கொடுத்தாலும் என் கண்களை நான் தரமாட்டேன்''என்றான் அந்த ஏழை!
""பார்! உன் கண்களுக்கே இவ்வளவு மதிப்பு என்றால் உன் முழு மதிப்பு எவ்வளவு இருக்கும்? அதற்காகவே நீ ஆண்டவனுக்கு நன்றி சொல்லலாம்! குறை காணலாமா? அவற்றைக் கொண்டு உழைப்பாயாக''என்றார்!
ஏழை உண்மையை உணர்ந்தவனாய் இறைவனுக்கு நன்றி கூறினான். தன் கை, கால்களைக் கொண்டு இயன்ற அளவு உழைக்க ஆரம்பித்தான். சிறிது காலம் கழிந்தவுடன் அவனது வறுமையும் நீங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


