இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ப்ரெடிரிக் சாங்கர்!
இங்கிலாந்தில் ரெண்ட்கோம்ப் என்ற கிராமத்தில் 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் இவர் பிறந்தார்!

இங்கிலாந்தில் ரெண்ட்கோம்ப் என்ற கிராமத்தில் 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் இவர் பிறந்தார்!
உயிரி வேதியியல் (பயோ கெமிஸ்ட்ரி) அறிஞர் இவர்! வேதியியல் துறையில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்!
நீரிழிவு நோயோடு தொடர்புடைய "இன்சுலின்' ஹார்மோனின் வடிவத்தைக் கண்டறிந்தவர்! மருத்துவம் மற்றும் மருந்தியல் துறைக்கு மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது! மனிதர்களுடைய கைரேகை ஒருவருக்கொருவர் மாறு படுவதைப்போல புரோட்டீன்களுக்கு தனித்தனி வடிவம் உண்டு என்பதை நிரூபித்தவர் ஃப்ரெட்ரிக் ஸôங்கர்!
இதற்காக 1958ஆம் ஆண்டில் சாங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!
டி.என்.ஏ வில் நியூக்ளியோடைடு வரிசையை கண்டறியப்படும் முறையை உருவாக்கியவர் சாங்கர்! இந்த முறைக்கு "செயின் டெர்மினேஷன் முறை'...,டைடியாக்ஸி டெர்மினேஷன் முறை...,என வேறு பெயர்கள் இருந்தாலும் இவரது பெயராலேயே "சாங்கர் முறை' எனப்படுகிறது.
சாங்கர், இந்த முறையைப் பயன்படுத்தி "பாக்டீரியா பேஜ் பை-எக்ஸ் 174' என்ற நுண்ணுயிரியின் மரபணு(ஜீன்) வரிசையைக் கண்டறிந்தார்! இது மனித மரபணுக்களை வரிசைப்படுத்தும் திட்டத்துக்கு முக்கியமானதாகும்! இதற்காக 1980ஆம் ஆண்டில் மீண்டும் நோபல் பரிசு சாங்கருக்கு வழங்கப்பட்டது!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற சாங்கர், பேராசிரியராகவும் புரத வேதியியல் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

